வெளிநாட்டவர்கள் கொண்டு குவிக்கும் பணத்தால் நிரம்பி வழியும் சுவிஸ் வங்கிகள்
சுவிஸ் வங்கிகளில் வரலாறு காணாத அளவில் பணம் குவிந்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் வெளிநாட்டவர்கள் என்கின்றது சுவிஸ் வங்கிகள் கூட்டமைப்பு.
வரலாறு காணாத அளவில் குவிந்துள்ள பணம்
சுவிஸ் வங்கிகள் கூட்டமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றின்படி, 2024ஆம் ஆண்டில் சுவிஸ் வங்கிகளில் கையிருப்பு 10.6 சதவிகிதம் உயர்ந்து 9,284 ட்ரில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளாகியுள்ளது.
ஒரு ட்ரில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் என்பது, இலங்கை மதிப்பில் 37,66,65,82,40,00,000.00 ரூபாய் ஆகும்.
இதில், 4,225 ட்ரில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் பணம், உள்ளூர் மக்கள் பணம் 5,059 சுவிஸ் ஃப்ராங்குகள்.
எதனால் இப்படி வெளிநாட்டவர்கள் சுவிஸ் வங்கிகளில் பணத்தைக் கொண்டு குவிக்கிறார்கள் என சுவிஸ் வங்கிகள் கூட்டமைப்பு ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளது.
அந்த ஆய்வில், உலகில் நிலவும் புவிசார் அரசியல் நிலைத்தன்மை இல்லாமையே இப்படி வெளிநாட்டவர்கள் சுவிஸ் வங்கிகளில் பணத்தைக் கொண்டு குவிக்கக் காரணம் என தெரியவந்துள்ளது.
அதாவது, மீண்டும் சுவிஸ் வங்கிகளின் நம்பகத்தன்மை மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் அரசியல் நிலைத்தன்மை, சட்டத் தெளிவு மற்றும் பொருளாதார நிலைத்தன்மை ஆகிய காரணங்களால் வெளிநாட்டவர்கள் சுவிட்சர்லாந்து வங்கிகளில் தங்கள் பணத்தை சேமித்துவைக்கிறார்கள்.
குறிப்பாக, அமெரிக்காவில் நிலவும் புவிசார் அரசியல் நிலையற்றதன்மை மற்றும் அபாயங்கள் காரணமாக, இந்த ஆண்டிலும் சுவிட்சர்லாந்து வங்கிகளுக்கு பணம் வந்து குவியும் என நிபுணர்கள் கருதுவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |