தடைகளையும் மீறி புடினுக்கு நெருக்கமானவர்களுடன் பணப்பரிவர்த்தனை செய்த சுவிஸ் வங்கிகள்
உக்ரைன் ஊடுருவலைத் தொடர்ந்து புடினுக்கு நெருக்கமானவர்கள் மீது தடைகள் விதிக்கப்பட்ட நிலையிலும், சுவிஸ் வங்கிகள் சில, அவர்களுடன் பணப்பரிவர்த்தனையைத் தொடர்ந்துள்ளது சமீபத்திய ஆய்வு ஒன்றிலிருந்து தெரியவந்துள்ளது.
தடைகள், குற்றச்சாட்டுகளை மீறி பணப்பரிவர்த்தனை
புடினுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் உயர் பதவிகள் வகிக்கும் மூத்த ரஷ்ய அலுவலர்கள் மீது தடைகள் விதிக்கப்பட்ட நிலையிலும், அவர்கள் மீது சட்ட விரோத பணப்பரிமாற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கும் நிலையிலும், சில வங்கிகள் அவர்களுடன் பணப்பரிவர்த்தனையைத் தொடர்ந்துள்ளது.
குறிப்பாக, Leonid Reiman என்பவர், புடினுக்கு நெருக்கமானவர். 2010 வரை அவர் புடின் அரசில் பல்வேறு பதவிகள் வகித்துவந்துள்ளார். ஏராளம் சொத்துக்கள் சேர்த்த Reiman, பெரிய அளவில் சட்ட விரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதை நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.
இப்படி Reiman மீது ஏராளம் குற்றச்சாட்டுகள் உள்ள நிலையிலும்,சுவிஸ் வங்கியான Julius Bär என்னும் வங்கி, அவருடனான பணப்பரிவர்த்தனையைத் தொடர்ந்துள்ளது சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |