பொது இடங்களில் பட்டாசு வெடிக்க தடை: சுவிட்சர்லாந்து முடிவு
சுவிட்சர்லாந்தில், பொதுமக்கள் கூடும் இடங்களில் பட்டாசுகள் வெடிக்க சுவிஸ் அரசு தடை விதிக்க உள்ளது.
பொது இடங்களில் பட்டாசு வெடிக்க தடை
சுவிட்சர்லாந்து முழுவதும், பொது இடங்களில் பட்டாசு வெடிக்கத் தடை, நாளை முதல், அதாவது, ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி அமுலுக்கு வருகிறது.
Crans-Montana இரவு விடுதி தீவிபத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்டுள்ள அரசின் இந்த முடிவுக்கு சுவிட்சர்லாந்தின் 26 மாகாணங்களும் சம்மதம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், இது தற்காலிக முடிவுதான் என தெரிவித்துள்ள அதிகாரிகள், பட்டாசு வெடிக்கத் தடை குறித்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் பரிசீலிக்கப்பட்டுவருவதாக தெரிவித்துள்ளார்கள்.
மேலும், பாதுகாப்பு தொடர்பான கடுமையான விதிகள் 2027ஆம் ஆண்டு அமுலுக்கு வரும் என்றும், என்றாலும், அபாயங்களைத் தடுப்பதற்காக தற்போது நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டிய நிலை உள்ளதால் தற்போது இந்த தடை விதிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |