பிள்ளைகளை அடிக்கக்கூடாது... நாடொன்றில் நடைமுறைக்கு வரும் சட்டம்
சுவிட்சர்லாந்து அரசு, பிள்ளைகளை அடிப்பதற்கு தடை விதித்துள்ளது.
பிள்ளைகளை அடிக்கக்கூடாது...
சுவிஸ் அரசு கொண்டுவந்துள்ள இந்த சட்டத்தின்படி, பிள்ளைகளை அடிக்கவோ, அவர்களுடைய சுயகௌரவத்தை பாதிக்கும் வகையில் அவர்களை நடத்தவோ கூடாது.

இந்த சட்டம், பெற்றோருக்கு மட்டுமல்ல, பிள்ளைகளை தற்காலிகமாக கவனித்துக்கொள்பவர்களுக்கும் பொருந்தும்.
2026ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1ஆம் திகதி அறிமுகமாகியுள்ள இந்த சட்டத்தின்படி, பிள்ளைகள் வன்முறைக்கு உட்படுத்தப்படாமலும், உடல் ரீதியான தண்டிக்கப்படாமலும், இழிவுபடுத்தும் வகையில் நடத்தப்படாமலும் வளர்க்கப்படவேண்டும்.
சட்டத்தை மீறுவோருக்கு அபராதம் முதல் சிறைத்தண்டனை வரை விதிக்கப்படலாம்.
கடந்த செப்டம்பர் மாதம், சுவிஸ் நாடாளுமன்றம் இந்த மாற்றத்துக்கு ஒப்புதலளித்த நிலையில், பிள்ளைகளை அடிப்பதற்கு தடை விதிக்கும் சட்டம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |