டெல்லி குண்டு வெடிப்பு - பயங்கரவாதிகளுக்கு உதவிய சுவிஸ் செயலி
டெல்லி கார் குண்டு வெடிப்பில் சுவிஸ் நாட்டை சேர்ந்த செயலி ஒன்று முக்கிய பங்கு வகித்துள்ளது.
டெல்லி கார் குண்டு வெடிப்பு
கடந்த நவம்பர் 10 ஆம் திகதி டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் குண்டு வெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மருத்துவர்களின் டைரி மற்றும் செல்போன்களை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
முன்னதாக கைது செய்யப்பட்ட இந்த பரிதாபத் குழு, டெலிகிராம் செயலியை பயன்படுத்தி தகவல் பரிமாற்றம் செய்ததை பாதுகாப்பு குழுவினர் விசாரணையில் கண்டறிந்தனர். இதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் i20 காரை வெடிக்க வைத்து உயிரிழந்த மருத்துவர் உமர் அகமது மற்றும் அவரது கூட்டாளிகளான மருத்துவர் ஷாஹீன் ஷாஹித் மற்றும் மருத்துவர் முஸம்மில் ஷகீல் இந்தியாவில் தடை செய்யப்பட்ட சுவிட்சர்லாந்து நாட்டின் திரீமா(threema) செயலியை பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது.
திரீமா செயலி
சுவிட்சர்லாந்தை தளமாக கொண்டு செயல்படும் இந்த திரீமா செயலியானது, கடந்த 2012 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதில், உரையாடுவதற்கு மொபைல் எண்ணோ, ஈமெயில் முகவரியோ தேவை இல்லை. சீரற்ற பயனர் பெயர் வைத்துக்கொள்ளலாம்.

உரையாட விரும்புவர்கள், நேரில் சந்திக்கும் போது செயலியில் உள்ள QR Code ஸ்கேன் செய்தால் போதும். இதற்கு கட்டணத்தை பிட்காயின் மூலமாக கூட செலுத்திகொள்ளலாம்.
இதன் காரணமாக பயனர்களை கண்டறிவது மிக கடினமாக ஒன்றாக உள்ளது.
இதில், உரையாடல்கள், புகைப்படம், வீடியோ, இருப்பிடம், வீடியோ கால், குழு உரையாடல் என அனைத்து வசதிகளும் உள்ளது.
மேலும், தனிப்பட்ட சர்வர் மூலம் உரையாடல்களை மற்றவர்கள் அணுக முடியாத வகையில், end-to-end encryption செய்து கொள்ளலாம்.
மேலும், இரு முனைகளிலும் செய்திகளை அழித்து கொள்ள அனுமதிப்பதோடு, மெட்டாடேட்டாவையும் சேமிக்காது. இதன் காரணமாக தடயங்களை கண்டறிவதில் சிரமம் ஏற்படும்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை திட்டமிடவும், ஒருங்கிணைக்கவும் இந்த செயலி முக்கிய பங்கு வகித்ததாக கருதப்படுகிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டில் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட பல மொபைல் செயலிகளில் திரீமாவும் ஒன்றாகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |