இந்தியாவுக்கு சுற்றுலா வந்தபோது மரணத்தில் எல்லை வரை சென்று திரும்பிய சுவிஸ் நாட்டவர்
இந்தியாவின் கேரள மாநிலத்துக்கு சுற்றுலா வந்த சுவிஸ் நாட்டவர் ஒருவர் விபத்தொன்றில் சிக்கி மரணத்தின் எல்லை வரை சென்று திரும்பியுள்ளார்.
விபத்தில் சிக்கிய சுவிஸ் நாட்டவர்
சுவிஸ் நாட்டவரான Hans Rudolf என்பவர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்த நிலையில், மோட்டார் சைக்கிளில் கேரளாவை சுற்றிவந்துள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக Rudolfஉடைய மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியுள்ளது.
கீழே விழுந்து கிடந்த அவரைப் பார்த்தவர்கள் அவரை அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அவரது விலா எலும்புகள் உடைந்திருந்ததால், அவை அவரது நுரையீரலை அழுத்த, நிமோனியா பாதிப்புக்குள்ளாகும் ஆபத்தான நிலையை அடைந்துள்ளார் Rudolf.
சரியான நேரத்தில் கிடைத்த சிகிச்சை
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட Rudolfஉடைய இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறையவே, அவரது நிலைமை மேலும் மோசமாகியுள்ளது.
அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, வென்டிலேட்டர் வசதி கொண்ட வேறொரு மருத்துமவமனைக்கு அவரசமாக மாற்றப்பட்டுள்ளார் Rudolf.
ஆபத்தான கட்டத்திலிருந்த Rudolfக்கு சிகிச்சைக்கு ஒப்புதல் அளிக்க இந்தியாவில் யாரும் இல்லாததால், மருத்துவர்கள் சுவிஸ் தூதரகத்தைத் தொடர்புகொண்டுள்ளார்கள்.
Rudolfஇன் உயிரைக் காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க தூதரகம் ஒப்புதலளித்ததைத் தொடர்ந்து, மருத்துவர்கள் அவருக்கு தேவையான சிகிச்சைகளை உடனடியாக அளித்துள்ளார்கள்.
சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டதால் நிமோனியா உருவாகும் அபாயம் தவிர்க்கப்பட்டு அவரது நிலமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
சிகிச்சைக்குப் பின் தற்போது சுவிட்சர்லாந்து திரும்பியுள்ளார் Rudolf.