கொரோனா சீன ஆய்வகத்தில் உருவாக்கப்படவில்லை... சுவிஸ் அறிவியலாளரின் கூற்று தொடர்பில் சுவிட்சர்லாந்து வெளியிட்டுள்ள பரபரப்பு தகவல்
கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்ற கருத்தை வெளியிடுமாறு உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருவதாக சுவிஸ் அறிவியலாளர் ஒருவர் வெளியிட்ட செய்தி ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால், அந்த பரபரப்பையே தூக்கி சாப்பிடும் வகையிலான பரபரப்பு தகவல் ஒன்றை சுவிட்சர்லாந்து தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் Bern பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் அறிவியலாளரான Wilson Edwards என்பவர், கொரோனா வைரஸ் சீன ஆய்வகம் ஒன்றில் உருவாக்கப்பட்டது. என்னும் கருத்தை நிராகரிக்கும் வகையில், அப்படி ஒரு கருத்தை வெளியிடுமாறு உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளதாக ஒரு செய்தி வெளியாக, அதை பிடித்துக்கொண்ட சீனா, பாருங்கள், சுவிஸ் அறிவியலாளரே சொல்லிவிட்டார். கொரோனா எங்கள் ஆய்வகத்தில் உருவாக்கப்படவில்லை என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும் என்று கேள்வி எழுப்பியது.
இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பீஜிங்கிலுள்ள சுவிஸ் தூதரகம் Wilson Edwardsஐக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியது.
பிறகுதான் தெரியவந்தது Wilson Edwards என்று ஒரு அறிவியலாளர் இல்லவே இல்லை என்பதும், இது சீனாஅவிழ்த்துவிட்ட கட்டுக்கதை என்பதும்!
ஆகவே, Wilson Edwards குறித்து வெளியிடப்பட்ட செய்திகளை திருத்தி வெளியிடுமாறு சுவிஸ் தூதரகம் சீன ஊடகங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.