கடலில் சிக்கித் தவித்த சுவிஸ் படகு: இந்திய கடலோரக் காவல் படையினர் செய்த உதவி... வெளியான காட்சிகள்
*கடலில் பயங்கர அலைகளில் சிக்கித் தவித்த சுவிஸ் படகு.
*ஹெலிகொப்டர் உதவியுடம் மீட்ட இந்திய கடலோரக் காவல் படை.
சுவிஸ் படகொன்றில் பயணித்த ஐந்துபேர் கடலில் சிக்கித் தவித்த நிலையில், அவர்களை இந்திய கடலோரக் காவல் படை மீட்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் மும்பைக்கருகிலுள்ள Alibaug என்ற இடத்தில் பயங்கர அலைகளுக்கிடையில் கடலில் சிக்கித் தவித்த சுவிஸ் படகொன்றிலிருந்து ஐந்து பேரை இந்திய கடலோரக் காவல் படையினர் மீட்டுள்ளனர்.
Photo | Coast Guard
அவர்களில்நான்கு பேர் சுவிஸ் நாட்டவர்கள், ஒருவர் வேறொரு வெளிநாட்டைச் சேர்ந்தவர் என இந்திய கடலோரக் காவல் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
படகில் இருந்தவர்களை ஹெலிகொப்டர் மூலம் இந்திய கடலோரக் காவல் படையினர் மீட்கும் காட்சிகளை வெளியாகியுள்ள வீடியோவில் காணலாம்.
அவர்கள் அனைவரும் மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Braving the rough seas and strong wind, @IndiaCoastGuard ship Agrim and #ICG helicopter in a joint operation rescued 05 crew (including foreigners) from a distressed #Switzerland flag yacht #Poorima at #Mandwa off #Alibaug today. All Crew safe and healthy. pic.twitter.com/qbjPXpZS40
— Indian Coast Guard (@IndiaCoastGuard) August 12, 2022
image - IndiaCoastGurard