சுவிஸ் எல்லைக் கட்டுப்பாடுகள் துவக்கம்: பயணிகளுக்கு ஏற்படவிருக்கும் பாதிப்பு

Switzerland
By Balamanuvelan Jun 11, 2026 06:15 AM GMT
Report

பிரான்சில், இம்மாதம், அதாவது, ஜூன் மாதம் 15ஆம் திகதி முதல், 17ஆம் திகதி வரை G7 உச்சி மாநாடு நடைபெற உள்ளது.

ஆகவே, பிரான்சுடனான சுவிஸ் எல்லைகளில் இன்று முதல் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படுகின்றன.

சுவிஸ் எல்லைக் கட்டுப்பாடுகள் துவக்கம்

பிரான்சின் Evian-les-Bains நகரில், இம்மாதம், அதாவது, ஜூன் மாதம் 15ஆம் திகதி முதல், 17ஆம் திகதி வரை G7 உச்சி மாநாடு நடைபெற உள்ளது.

மாநாட்டில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உட்பட பல நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். 

சுவிஸ் எல்லைக் கட்டுப்பாடுகள் துவக்கம்: பயணிகளுக்கு ஏற்படவிருக்கும் பாதிப்பு | Swiss Border Close And Check Amid G7 Summit

விடயம் என்னவென்றால், 2003ஆம் ஆண்டு, பிரான்சின் இதே Evian-les-Bains நகரில் G8 உச்சி மாநாடு நடைபெற்றது.

மாநாட்டுக்கு முந்தைய இரவு, உலகமயமாக்கலுக்கு எதிரான அமைப்பொன்றைச் சேர்ந்த சிலர் ஜெனீவாவில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார்கள். 

வெளிநாட்டவர்களுக்கு சுவிஸ் விமான நிலையங்கள் விடுத்துள்ள எச்சரிக்கை செய்தி

வெளிநாட்டவர்களுக்கு சுவிஸ் விமான நிலையங்கள் விடுத்துள்ள எச்சரிக்கை செய்தி

ஆர்ப்பாட்டமாக துவங்கிய விடயம், சூறையாடலில் முடிந்தது. ஆடம்பர பொருட்கள் விற்பனை நிலையங்கள், கடைகள் என அனைத்தையும் நொறுக்கிய ஒரு கூட்டம் பொருட்களை சூறையாடியது.

ஆக, இம்முறையும் அதேபோல் அசம்பாவிதம் எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதில் சுவிஸ் அரசு உறுதியாக உள்ளது.

ஆகவே, மாநாடு நடைபெறும் Evian-les-Bains நகரை ஒட்டியுள்ள ஜெனீவா மாகாணத்தின் எல்லைகளில் சுமார் 30 எல்லைகள் இன்று முதல் மூடப்படுகின்றன.

ஜெனீவாவுக்கும் பிரான்சுக்கும் இடையில் ஏழு இடங்களில் மட்டுமே எல்லை வழியாக மக்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

பயணிகளுக்கு ஏற்படவிருக்கும் பாதிப்பு

விடயம் என்னவென்றால், தினமும் சுமார் 150,000 பேர் பணிக்குச் செல்வதற்காக ஜெனீவா பிரான்ஸ் எல்லையைக் கடக்கிறார்கள்.

ஆகவே, எல்லைக் கட்டுப்பாடுகள் துவக்கப்படுவதைத் தொடந்து, எல்லைகளிலுள்ள சோதனைச்சாவடிகளில் மக்கள் இனி நீண்ட வரிசைகளில் காத்திருக்க நேரிடலாம். 

சுவிஸ் எல்லைக் கட்டுப்பாடுகள் துவக்கம்: பயணிகளுக்கு ஏற்படவிருக்கும் பாதிப்பு | Swiss Border Close And Check Amid G7 Summit

அது மட்டுமின்றி, விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்படுவதால், விமான நிலையங்களிலும் பயணிகள் தாமதத்தை எதிர்கொள்ள நேரிடலாம். மேலும், ஜெனீவா பொதுப்போக்குவரத்திலும் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

எல்லை கடந்து செல்லும் இரண்டு பேருந்துகள் ரத்து செய்யப்படுகின்றன, ஏழு பாதைகளில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

ஆக மொத்தத்தில், பிரான்ஸ் உச்சி மாநாடு காரணமாக எல்லை கடந்து பயணிக்கும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாக இருக்கிறார்கள்! 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US