சுவிட்சர்லாந்தால் பிரச்சினை... பிரித்தானியர் பரபரப்புக் குற்றச்சாட்டு
ரஷ்யாவை நிதி ரீதியாக உலகின் மற்ற நாடுகளிலிருந்து தனிமைப்படுத்தவேண்டும் என்று கூறியுள்ள பிரித்தானிய அரசியல் ஆர்வலர் ஒருவர், அதற்கு சுவிட்சர்லாந்து தடையாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியக் கொள்கையுடன் இணைந்து செயல்படவேண்டும்
ஐரோப்பிய ஒன்றியக் கொள்கையுடன், சுவிட்சர்லாந்தும் இணைந்து செயல்பட்டு, ரஷ்யாவுக்கெதிராக தடைகள் விதிக்கவேண்டும் என்று கூறியுள்ளார் பிரித்தானிய அரசியல் ஆர்வலரும் நிதியாளருமான Bill Browder.
© Keystone / Gaetan Bally
ரஷ்யாவில் நடைபெற்ற மாபெரும் ஊழல் ஒன்றை வெளிக்கொணர்ந்த Sergei Leonidovich Magnitsky என்னும் கணக்காளரை சிறையிலடைத்து, சாகவிட்ட பிரச்சினையில் தொடர்புடைய ரஷ்யர்களான Vladlen Stepanov, Denis Katsyv மற்றும் Dmitry Klyuev என்பவர்களுடைய 14 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் மதிப்புடைய சொத்துக்களை பறிமுதல் செய்த சுவிட்சர்லாந்து, பின்னர் அவற்றை அந்த ரஷ்யர்களுக்கே திருப்பிக் கொடுப்பதென முடிவு செய்தது.
நிதியாளர் எச்சரிக்கை
அந்த ரஷ்யர்களுக்கு அவர்களுடைய பணத்தை சுவிட்சர்லாந்து திருப்பிக் கொடுக்குமானால், சர்வதேச சிக்கல் ஒன்றின் மையத்தில் சுவிட்சர்லாந்து சிக்கிக்கொள்ள நேரிடும் என எச்சரித்துள்ளார் Bill Browder.
நிதி விடயங்களைப் பொருத்தவரையில், சுவிட்சர்லாந்து நாகரீக உலகின் ஒரு பகுதியாக மாறித்தான் ஆகவேண்டும் என்று கூறினார் Bill Browder. அவர் இந்த விடயம் தொடர்பில் துவக்கிய பிரேரணையைத் தொடர்ந்து, US Helsinki Commission என்னும் ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான ஆணையமும் Michael Lauber என்னும் அட்டர்னி உட்பட மூன்று சுவிஸ் நாட்டவர்கள் மீது தடை விதிக்க வலியுறுத்தியது.
Unsplash
ஆனால், இந்த தடை விடயத்தில் சுவிட்சர்லாந்து மற்ற நாடுகளைவிட குறைந்த அளவே செயல்படுவதாகவும், தடை விதிக்கப்பட்டவர்களின் சொத்துக்களை சுவிட்சர்லாந்து முடக்காமல், அவர்களிடமிருந்து பணம் பெறுவதாகவும் கூறப்படும் கூற்றுக்கள் ஆதாரமற்றவை என்று கூறி, அந்த ஆணையத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளை சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் நிராகரித்துவிட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |