அகதிகளை ஏமாற்றி பணம் பார்க்கிறார்கள்: சுவிஸ் மாகாணமொன்றின்மீது பரபரப்புக் குற்றச்சாட்டு
அகதிகளை வைத்து சுவிஸ் மாகாணமொன்று இலாபம் சம்பாதிப்பதாக அரசியல்வாதி ஒருவர் பரபரப்புக் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.
அது எந்த மாகாணம்?
மத்திய சுவிட்சர்லாந்திலுள்ள Lucerne மாகாண கவுன்சிலர், அந்த மாகாணம், அகதிகளை வைத்து இலாபம் பார்ப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
பெடரல் அரசு அகதிகளுக்காக கொடுக்கும் பணத்தைவிட குறைவான தொகையையே Lucerne மாகாணம் அகதிகளுக்காக செலவிடுவதாக அம்மாகாண கவுன்சிலரான Urban Frye குற்றம் சாட்டுகிறார்.
நேற்று ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த Urban Frye, அகதி ஒருவருக்கு பெடரல் அரசு 550 சுவிஸ் ஃப்ராங்குகள் கொடுக்கும் நிலையில், அதில் சுமார் 200 ஃப்ராங்குகளை மாகாணம் கொடுக்காமல் பதுக்கிவிடுவதாக தெரிவித்துள்ளார்.
விவகாரம் மாகாண நீதிமன்றத்தை எட்டியுள்ள நிலையில், தேவையானால், இந்த பிரச்சினையை ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்துக்குக் கூட கொண்டு செல்ல இருப்பதாகத் தெரிவித்துள்ளார் Urban Frye.