கொக்கைன் விற்பனைக்கு தயாராகும் சுவிஸ் தலைநகரம்
தனிப்பட்ட பயன்பாட்டிற்காக மட்டும் பயன்படுத்தும் வகையில் கொக்கைன் விற்பனையை அனுமதிக்கும் முன்னோட்ட திட்டத்தை சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரம் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய சட்டத்தில் திருத்தம்
போதை மருந்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு வேறு எங்கும் முயற்சிக்கப்படாத தீவிர அணுகுமுறை இதுவென்றும் கூறப்படுகிறது. தொடர்புடைய திட்டத்திற்கு நாடாளுமன்றம் ஆதரவளித்திருந்தாலும், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவும் பெறுவதுடன், தேசிய சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவேண்டும் என்றும் கூறப்படுகிறது.
@reuters
இதனிடையே, உலகம் முழுவதும் போதை மருந்துக் கொள்கை உருமாற்றம் கண்டு வருகிறது, அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் போதை மருந்து சிகிச்சைக்கு ஆதரவாக 2021ம் ஆண்டில் சிறிய அளவிலான கொக்கைன் வைத்திருப்பதை குற்றமற்றதாகவே அறிவித்துள்ளனர்.
ஸ்பெயின், இத்தாலி மற்றும் போர்த்துகல் உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் கொக்கைன் உள்ளிட்ட போதைப்பொருள் வைத்திருந்ததற்காக இனி சிறைத்தண்டனை இல்லை என்றே சட்டத்திருத்தம் கொண்டுவந்துள்ளனர்.
பணம் படைத்த சுவிட்சர்லாந்து
ஆனால் பெர்ன் நகரில் தொடர்புடைய திட்டமானது தற்போது விவாத கட்டத்திலேயே உள்ளது. போதை மருந்துக்கு முழுமையான தடை என்பது எந்த பயனும் தரவில்லை என சில அரசியல்வாதிகள் மற்றும் நிபுணர்கள் வெளிப்படையாக விமர்சித்ததை அடுத்து,
@afp
போதைப்பொருள் மீதான அதன் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய இருப்பதாக சுவிட்சர்லாந்து நிர்வகாம் குறிப்பிட்டுள்ளது, இதன் ஒருபகுதியாகவே கொக்கைன் விற்பனையை அனுமதிக்க ஆய்வுகள் முன்னெடுத்து வருகிறது.
ஐரோப்பாவிலேயே கொக்கைன் பயன்பாடு அதிகம் கொண்ட நாடாக உள்ளது பணம் படைத்த சுவிட்சர்லாந்து. ஐரோப்பாவிலேயே கொக்கைன் பயன்பாடு அதிகமான முதல் 10 நகரங்களில் சுவிட்சர்லாந்தின் சூரிச், பாஸல் மற்றும் ஜெனீவா ஆகியவை இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |