சுவிட்சர்லாந்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா: கொரோனா வைரஸின் தற்போதைய குறி யார் மீது?
சுவிட்சர்லாந்தில், இந்த வாரமும் கொரோனா தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது.
கடந்த வாரம் சுவிட்சர்லாந்தில் 4,988 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளான நிலையில், இந்த வாரம் அந்த எண்ணிக்கை மேலும் 26 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
அதாவது, இந்த வாரம் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 6,303.
கொரோனா அபாயம் உள்ளவர்கள் என கருதப்படும் கூட்டத்தினரில் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுவிட்ட நிலையில், இப்போது தடுப்பூசி பெறாதவர்களை பெருமளவில் குறிவைத்துள்ளது கொரோனா வைரஸ், குறிப்பாக இளம் வயதினரை என்று சொல்லலாம்.
உதாரணமாக, Vaud மாகாணத்தில், ஜூலை மாதத்தின் கடைசி இரண்டு வாரங்களில் பதிவான 1,030 கொரோனா தொற்றுக்களில், 9 பேர் மட்டுமே முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தடுப்பூசி பெற்றவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகும் வாய்ப்பு, மற்றவர்களை விட 80 மடங்கு குறைவு என்கிறது ஆய்வு ஒன்று.
சுவிட்சர்லாந்தில் கொரோனா தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையிலும், ஒரே ஆறுதல், இந்த வாரமும் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 3 மட்டுமே என்பதுதான்.