இன்று முதல்... சுவிஸ் தடுப்பூசி சான்றிதழ்கள் தொடர்பில் ஒரு முக்கிய செய்தி
இன்று முதல் சுவிஸ் தடுப்பூசி சான்றிதழ்கள், ஐரோப்பிய ஒன்றியத்தில் செல்லுபடியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தால் வழங்கப்படும் தடுப்பூசி சான்றிதழ்கள், இன்று (9 ஜூலை 2021) முதல், ஐரோப்பிய ஒன்றியம் முழுவதிலும் செல்லுபடியாகும் என ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் தெரிவித்துள்ளது.
மற்ற எந்த ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் வழங்கப்படும் தடுப்பூசி சான்றிதழ்கள் எப்படி ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் அனைத்திலும் செல்லுபடியாகுமோ, அதேபோல் சுவிட்சர்லாந்தில் வழங்கப்படும் தடுப்பூசி சான்றிதழும் செல்லுபடியாகும் என ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், பயணிகள் தங்கள் நாட்டுக்குள் நுழையும்போது, கொரோனா சோதனையில் தங்களுக்கு கொரோனா இல்லை என்பதைக் காட்டுவதற்கான ஆதாரத்தை சமர்ப்பிப்பது போன்ற கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக அந்தந்த நாடுகள் முடிவு செய்துகொள்ளலாம் என்பதையும் ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆகவே, பயணிகள் தாங்கள் பயணம் புறப்படுவதற்கு முன் அந்தந்த நாடுகளில் நடைமுறையில் இருக்கும் கட்டுப்பாடுகள் குறித்து விசாரித்து அறிந்துகொள்வது நலம் பயக்கும்.