அமெரிக்கா விதித்த கூடுதல் வரி- சுவிட்சர்லாந்தின் பாரம்பரிய உணவுப் பொருளின் விற்பனை பாதிப்பு
அமெரிக்கா விதித்த கூடுதல் வரியால் சுவிட்சர்லாந்தின் பாரம்பரிய உணவுப் பொருளான சீஸ் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற க்ருயேரே (Gruyere) சீஸ் தயாரிப்பாளர்கள், அமெரிக்கா விதித்த புதிய இறக்குமதி வரிகளால் விற்பனை குறைந்ததால், உலகின் பிற பகுதிகளில் புதிய சந்தைகளை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்கா கடந்த ஆண்டு 10 சதவீதம் வரி விதித்திருந்த நிலையில், இவ்வாண்டு அது 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்க சந்தையில் சுவிஸ் சீஸின் தேவை பெருமளவில் குறைந்துள்ளது.

அமெரிக்கா, க்ருயேரே சீஸின் மொத்த விற்பனையில் சுமார் 13 சதவீதம் பங்கைக் கொண்டிருந்தது. விற்பனை குறைவால், தயாரிப்பாளர்கள் 5 சதவீதம் உற்பத்தியை குறைத்துள்ளனர். இதன் மூலம் விலை நிலைத்தன்மையைப் பேணுவதோடு, அதிகப்படியான கையிருப்பு உருவாகாமல் தடுக்க முயற்சி செய்கிறார்கள்.
“சீஸ் விற்பனை குறைந்தாலும், விலையை குறைத்து விற்காமல், தரத்தைப் பேணுவது முக்கியம்,” என தயாரிப்பாளர் அலெக்சாண்டர் முரித் தெரிவித்துள்ளார்.
சீஸ் வியாபாரிகள், அமெரிக்க சந்தையை மாற்றும் வகையில் புதிய சந்தைகளை உலகம் முழுவதும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அமெரிக்கா போன்ற பெரிய சந்தையை உடனடியாக மாற்றுவது சாத்தியமில்லை என அவர்கள் கூறுகின்றனர்.
சுவிஸ் ஆல்ப்ஸ் மலைப்பகுதிகளில் பசுக்களை மேய்த்து, இயற்கை பால் மூலம் தயாரிக்கப்படும் க்ருயேரே சீஸ், சுவிட்சர்லாந்தின் பாரம்பரிய உணவுப் பொருளாகும். அமெரிக்க வரி காரணமாக, இந்த பாரம்பரிய தொழில் கடுமையான சவால்களை எதிர்கொள்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |