மியான்மர் நாட்டில் சுவிஸ் குடிமகன் ஒருவர் கைது: பின்னணி
புத்த மதத்தை இழிவுபடுத்தும் வகையில் திரைப்படம் ஒன்றை உருவாக்கியதாக சுவிஸ் குடிமகன் ஒருவர் மியான்மர் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுவிஸ் குடிமகனான Didier Nusbaumer (52) என்பவர், ஒரு 12 வயது சிறுமி உட்பட 13 மியான்மர் குடிமக்களுடன் ஆகஸ்ட் 8 ஆம் தேதி கைது செய்யப்பட்டதாக மியான்மர் அரசு நடத்தும் செய்தித்தாளான மியான்மா அலின் தெரிவித்துள்ளது.
புத்த மதத்தை அவமதிப்பது மியான்மரில் தண்டனைக்குரிய குற்றமாகும். மியான்மர் மக்களில் 90 சதவிகிதத்தினர் புத்த மதத்தைப் பின்பற்றுபவர்கள்தான்.
புத்த மதத்தினர் எதிர்ப்பு
Didier உருவாக்கிய Don’t Expect Anything என்னும் திரைப்படம் யூடியூபில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், படத்தின் கிளிப்புகள் சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து அதற்கு மியான்மரில் வாழும் புத்த மதத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.
படத்தில் முக்கிய வேடம் ஏற்றுள்ளவர்களின் உடல் மொழி மற்றும் உரையாடல்கள் புத்த மதத் துறவிகளின் கண்ணியம் மற்றும் ஒழுக்கத்தை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளனர் என்பதை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |