சுவிஸ் குடியுரிமை விண்ணப்பங்களில் ஐந்தில் ஒன்று நிராகரிப்பு: தவிர்ப்பது எப்படி?

By Balamanuvelan Jan 06, 2025 10:05 AM GMT
Report

சுவிஸ் குடியுரிமை பெறுவது மிகவும் கடினமான ஒரு விடயம் என்பதை பலரும் அறிந்திருக்கக்கூடும்.

சுவிஸ் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்களில் ஐந்தில் ஒன்று நிராகரிப்படுகிறதாம்.

இந்நிலையில், சுவிஸ் குடியுரிமை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதைத் தவிர்ப்பது எப்படி என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சுவிஸ் குடியுரிமை பெற இரண்டு வழிமுறைகள் உள்ளன

1. சாதாரண வழிமுறை, 2. எளிமையாக்கப்பட்ட வழிமுறை.

பெரும்பாலானவர்கள் சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கு பயன்படுத்துவது,

சாதாரண அல்லது வழக்கமான குடியுரிமை பெறும் முறைமையாகும்.

அடுத்ததாக, எளிமையாக்கப்பட்ட குடியுரிமை பெறும் முறைமை என்பது குறுகிய கால, மற்றும் சிக்கல் குறைவான ஒரு முறைமை.

அது, சுவிஸ் குடிமக்களின் வெளிநாட்டவர்களான கணவர் அல்லது மனைவி மற்றும் சுவிஸ் குடிமக்களின் குழந்தைகளுக்கானது.

மேலும், 2017ஆம் ஆண்டு முதல், அது மூன்றாம் தலைமுறை வெளிநாட்டவர்களுக்கானதும் கூட.

சுவிஸ் நாட்டவர்களின் கணவர் அல்லது மனைவியான வெளிநாட்டவருக்கான எளிமையாக்கப்பட்ட குடியுரிமை பெறும் முறைமையைப் பொருத்தவரை, உங்களுக்குத் திருமணமாகி குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் ஆகியிருக்கவேண்டும், மேலும், நீங்கள் குறைந்தது ஐந்தாண்டுகள் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்திருக்கவேண்டும்.

ஆக, விதிமுறைகளுக்கு உட்பட்டு, முறையான ஆவணங்களை சமர்ப்பிப்பதால் உங்கள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதைத் தவிர்க்கலாம்.

மூன்று மட்டங்களிலான விதிமுறைகள்

வழக்கமான முறையில் குடியுரிமை பெற, ஒரு வெளிநாட்டவர், அரசு விதித்துள்ள மூன்று மட்டங்களிலான விதிமுறைகளுக்கு உட்படவேண்டும்.

அவையாவன, நகராட்சி, மாகாணம் மற்றும் பெடரல் மட்டம்.

2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதி பெடரல் வெளிநாட்டவர்களின் சட்டத்தில் செய்யப்பட்ட மாற்றங்களின்படி, குடியுரிமை கோரி விண்ணப்பிப்பவர், சுவிட்சர்லாந்தில் குறைந்தது 10 ஆண்டுகளாவது வாழ்ந்திருக்கவேண்டும்.

பதின்ம வயதிலேயே நீங்கள் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்தவர்களாக இருந்தாலோ, அல்லது சுவிஸ் நிரந்தர குடியிருப்பு அனுமதி (C residence permit) வைத்திருப்பவர்களாகவோ இருந்தால், அதற்கும் குறைவான காலம் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்தவர்களாக இருந்தாலும் போதும்.

குடியுரிமைக்கு விண்ணப்பிப்பவர்கள், சுவிஸ் சட்டதிட்டங்களுக்கு கீழ்ப்படிகிறவர்களாகவும், தங்களால் நாட்டுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதையும், தாங்கள் சுவிஸ் மக்களுடன் நன்றாக ஒருங்கிணைந்து வாழ்கிறவர்களாக இருப்பதையும் நிரூபித்துக் காட்டவேண்டும்.

விளக்கமாகச் சொன்னால், நீங்கள் சுவிஸ் பொருளாதார, சமூக மற்றும் மொழிசார் விடயங்களில் பங்கெடுப்பவராக இருக்கவேண்டும் என்பது அதன் பொருள்.

ஒருவர் எந்த அளவுக்கு சுவிட்சர்லாந்து மக்களுடன் ஒன்றிணைந்து வாழ்கிறார் என்பதை பெடரல் அதிகாரிகளுக்கு சொல்வது மாகாண மற்றும் நகராட்சி அதிகாரிகளின் வேலையாகும்.

ஆனால், புதிய பெடரல் சட்டமோ, இன்னும் கூடுதல் விடயங்களை உங்களிடம் எதிர்பார்க்கிறது. அதாவது, நீங்கள் மட்டுமின்றி உங்கள் குடும்பத்தினரும் சுவிட்சர்லாந்துடன் ஒருங்கிணைந்து வாழ்வதை, நீங்கள் ஊக்குவிக்கவேண்டும் என அது எதிர்பார்க்கிறது.

நீங்கள் சமீபகாலத்தில் அரசு உதவி பெற்றவர்களாக இருந்தால், உங்களால் குடியுரிமை கோரி விண்ணப்பிக்க முடியாது

2018ஆம் ஆண்டில் மற்றொரு மாற்றமும் கொண்டுவரப்பட்டது. அதாவது, நீங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் அரசின் உதவியை பெற்றிருந்தால், நீங்கள் இதுவரை பெற்ற தொகையை திருப்பிச் செலுத்தினாலொழிய, உங்களால் குடியுரிமை கோரி விண்ணப்பிக்க இயலாது.

அரசு உதவி பெறுவது, குடியுரிமை கோரி விண்ணப்பிக்கும் ஒருவர், பணி செய்வதன் மூலமோ அல்லது பயிற்சி எடுத்துக்கொள்வதன் மூலமோ சுவிஸ் அரசுக்கு தன் பங்களிப்பைச் செய்திருக்கவேண்டும் என்ற விடயத்துக்கு எதிரானதாக கருதப்படுகிறது.

நீங்கள் வாழும் மாகாணத்தில் நீங்கள் எவ்வளவு காலமாக தொடர்ந்து வாழ்ந்து வருகிறீர்கள் என்பது மிக முக்கியமான காரணியாகும்

நீங்கள் சுவிட்சர்லாந்தில் பத்து ஆண்டுகள் வரை கூட வாழ்ந்திருக்கலாம். ஆனால், இப்போது வாழும் மாகாணத்தில் எவ்வளவு காலமாக தொடர்ந்து வாழ்ந்து வருகிறீர்கள் என்பது மிகவும் முக்கியம்.

மற்றொரு மாகாணத்துக்கோ அல்லது நகராட்சிக்கோ குடிபெயர்ந்து அங்கு நீங்கள் குடியுரிமை கோர முடியாது. இது தொடர்பில் ஒவ்வொரு மாகாணமும் தனக்கென தனிப்பட்ட விதிகளைக் கொண்டுள்ளது.

என்றாலும், குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் ஒருவர் ஒரு மாகாணத்தில் குறிப்பிட்ட காலத்துக்கு தொடர்ச்சியாக வாழ்ந்திருக்கவேண்டும் என அனைத்து மாகாணங்களுமே எதிர்பார்க்கின்றன.

நீங்கள் உள்ளூர் மொழியில் பேசுவது கட்டாயம்

சுவிஸ் குடியுரிமை கோர மொழித்திறன் மிகவும் அவசியமாகும். ஆனால், இந்த தகுதியும் மாகாணத்துக்கு மாகாணம் மாறுபடும்.

ஆனால், 2018இல் கொண்டுவரப்பட்ட மாற்றங்களின்படி, குடியுரிமை கோரி விண்ணப்பிப்போர் உள்ளூர் மொழியில் எழுதுவதில் A2 மட்டத்திலும், பேசுவதில் B1 மட்டத்திலும் மொழித்திறன் பெற்றிருக்கவேண்டும்.

உங்கள் தாய்மொழி சுவிஸ் தேசிய மொழிகளில் ஒன்றாக இருந்தாலோ, அல்லது சுவிட்சர்லாந்தில் நீங்கள் ஐந்து ஆண்டுகள் பள்ளிப்படிப்பை முடித்திருந்தாலோ அல்லது சுவிஸ் தேசிய மொழி ஒன்றில் secondary school leaving certificate அல்லது tertiary qualification முடித்திருந்தாலோ, மொழித்திறனை நிரூபிப்பதிலிருந்து உங்களுக்கு விலக்களிக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

மாகாண மற்றும் நகராட்சி விதிகள் குறிப்பிடத்தக்க அளவில் வித்தியாசப்படும்

நீங்கள் வாழும் பகுதியில், நீங்கள் அங்குள்ள மக்களுடன் எந்த அளவுக்கு இணைந்து வாழ்கிறீர்கள் என்பதற்கான தகுதித் தேவைகள் மாகாணத்துக்கு மாகாணம் மாறுபடும்.

உங்கள் குடியுரிமை விண்ணப்பம் பரிசீலிக்கப்பட சிறிது காலமாகலாம்

நீங்கள் எங்கு வாழ்கிறீர்கள் என்பதைப் பொருத்து, உங்கள் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் கால அளவு மாறுபடும். அது சில ஆண்டுகள் கூட ஆகலாம் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

குடியுரிமைக்காக நீங்கள் குறிப்பிட்ட தொகையை செலவு செய்யவேண்டியிருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்

குடியுரிமை வழங்குதல் தொடர்பான விடயங்களை மூன்று மட்டத்தில் அதிகாரிகள் அணுகுவதால், குடியுரிமைக்கு விண்ணப்பிப்போர் மூன்று வகையான கட்டணங்கள் செலுத்தவேண்டியிருக்கும்.

சுவிஸ் பெடரல் மட்டத்தில் 50 முதல் 150 சுவிஸ் ஃப்ராங்குகள் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், மாகாண மற்றும் நகராட்சி கட்டணங்கள் இன்னமும் அதிகமாக இருக்கலாம்.

நகராட்சி மட்டத்தில் 500 முதல் 1,000 ஃப்ராங்குகளும், மாகாண மட்டத்தில் 2,000 ஃப்ராங்குகள் வரையும் விண்ணப்பத்திற்காக கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

சுழிபுரம், சுதுமலை, வவுனியா, Colombes, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, நியூ யோர்க், United States, கோண்டாவில் கிழக்கு

30 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடமராட்சி, London, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், கல்விளான், விசுவமடு, கொக்குவில், Paris, France, Basel, Switzerland

27 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, Chur, Switzerland

20 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, கிளிநொச்சி

01 Jul, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Herne, Germany

30 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, குப்பிளான், சென்னை, India, Toulouse, France

24 Jun, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Brampton, Canada

29 Jun, 2025
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Markham, Canada

29 Jun, 2024
38ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், India, புங்குடுதீவு

30 Jun, 1987
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, மானிப்பாய், பிரான்ஸ், France

28 Jun, 2000
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

30 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

விடத்தல்தீவு, அடம்பன்

09 Jul, 2024
மரண அறிவித்தல்

நவாலி, உடுவில், பிரித்தானியா, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Stains, France

22 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US