கடுமையான விதிகளால் உண்மையாகவே Golden passportஆக மாறிப்போன சுவிஸ் குடியுரிமை
நன்றாக படித்தவர்கள் மற்றும் பணக்காரர்களான புலம்பெயர்ந்தோர் மட்டுமே சுவிஸ் குடியுரிமை பெறமுடியும் என்ற ஒரு நிலைமை ஏற்பட்டுவிட்டதால், சுவிஸ் குடியுரிமை உண்மையாகவே Golden passportஆக மாறிவிட்டதாக தெரிவிக்கிறது ஆய்வு ஒன்று.
உண்மையாகவே Golden passportஆக மாறிப்போன சுவிஸ் குடியுரிமை
சுவிஸ் குடியுரிமை பெறுவது எவ்வளவு கடினம் என்பது பலரும் நன்கு அறிந்த ஒரு விடயமாகிவிட்டது என்பதை மறுப்பதற்கில்லை. நீங்கள் சுவிஸ் நாட்டவர் ஒருவரை மணந்திருந்தாலோ அல்லது சுவிஸ் நாட்டவருக்கு பிறந்திருந்தாலோ அன்றி, உங்களுக்கு சுவிஸ் குடியுரிமை கிடைப்பது எளிதான விடயம் அல்ல.
மட்டுமின்றி, வெளிநாட்டவர் ஒருவர் சுவிஸ் குடியுரிமை பெறவேண்டுமானால், அவர் 10 ஆண்டுகள் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்திருக்கவேண்டும், அதற்கு அதிக செலவும் பிடிக்கலாம்.
அத்துடன், மொழிப்புலமை அவசியம், தேர்வில் கேட்கப்படும் எடக்கு முடக்கான, இவற்றில் எந்த ஏரி பெரியது? Neuchâtel ஏரியா, Lucerne ஏரியா அல்லது Zurich ஏரியா? என்பதுபோன்ற ’அசாதாரண’ கேள்விகளுக்கு பதிலளிக்கவும் வேண்டியிருக்கும்.
ஆய்வு முடிவுகள்
இந்நிலையில், சுவிஸ் குடியுரிமை உண்மையாகவே Golden passportஆக மாறிவிட்டதாக தெரிவிக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.
நடக்கும் விடயங்களைப் பார்த்தால், நன்கு படித்த, நல்ல வசதியுள்ள, 20 முதல் 40 வயதுக்குட்பட்ட, சமுதாயத்தின் உயர்ந்த இடத்தில் வாழும், குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கான விதிகளை நன்கு அறிந்தவர்கள் மட்டுமே சுவிஸ் குடிமகனாகலாம் என்கிறது அந்த ஆய்வு.
2018ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட விதி ஒன்று, C அனுமதி பெற்றவர்கள் மட்டுமே சுவிஸ் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என்கிறது. அப்படியானால், குறைந்த கால அனுமதி பெற்றவர்கள் என்ன செய்வது?
இன்னொரு விடயம், மொழி! சுவிஸ் குடியுரிமைக்கான மொழித்தேர்வுகளில், பேசுவதில் B1 மட்டத்திலும், எழுதுவதில் A2 மட்டத்திலும் புலமை பெற்றிருக்கவேண்டும். அந்த மட்டத்தை எட்டுவது பலருக்கும் கடினமான விடயம். அத்துடன், ஏற்கனவே சுவிஸ் மொழிகளில் ஒன்றைப் பேசுபவர்கள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என ஊக்குவிக்கிறது சுவிஸ் அரசு. அப்படி பார்த்தால், ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலியிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள்தான் சுவிஸ் குடியுரிமை பெறமுடியும் போலிருக்கிறது!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |