சுவிஸ் குடியுரிமை தொடர்பில் மீண்டும் ஏமாற்றமளிக்கும் ஒரு முடிவை எடுத்துள்ள சுவிட்சர்லாந்து...
சுவிட்சர்லாந்தில் பிறந்தோருக்கு தானாகவே குடியுரிமை கிடைக்க வழிவகை செய்யும் பிரேரணை ஒன்றை சுவிஸ் அரசு நிராகரித்துவிட்டது.
சென்ற வாரம் (2022 ஜூன் 15ஆம் திகதி), ஜெனீவாவைச் சேர்ந்த பெடரல் நாடாளுமன்ற உறுப்பினரான Stefania Prezioso Batou, சுவிட்சர்லாந்தில் பிறந்தோருக்கு தானாகவே குடியுரிமை கிடைக்க வழிவகை செய்யும் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.
ஆனால், அதற்கு ஆதரவாக 75 வாக்குகளும், எதிராக 112 வாக்குகளும் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சுவிஸ் பெடரல் நாடாளுமன்றத்தில் அந்த பிரேரணை நிராகரிக்கப்பட்டுவிட்டது.
வெளிநாட்டவர்களுக்கு சுவிட்சர்லாந்தில் பிறந்த பிள்ளைகளுக்கு 18 வயதாகும்போது தானாகவே சுவிஸ் குடியுரிமை கிடைக்கும் வகையில் சட்டம் ஒன்று நிறைவேற்றப்படவேண்டும் என Batou விரும்பினார். ஆனால், அதை சுவிட்சர்லாந்தின் நாடாளுமன்றம் நிராகரித்துவிட்டது.
ஏற்கனவே, 2021ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் இதேபோல் ஒரு பிரேரணை சுவிட்சர்லாந்தில் மேலவை முன்வைக்கப்பட்டபோதும், அது சுவிஸ் மாகாண கவுன்சிலால் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.