ஆயிரக்கணக்கான சுவிஸ் நிறுவனங்களுக்கு ஆட்கள் தேவை: என்னென்ன பணியிடங்கள் காலியாக உள்ளன?
ஆயிரக்கணக்கான சுவிஸ் நிறுவனங்கள் பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை என விளம்பரம் செய்து வருகின்றன.
தற்போது அதிக அளவில் எந்தெந்த பணிகளுக்கு ஆட்கள் தேவை என்று பார்க்கலாம்...
சுவிட்சர்லாந்தில், மிக அதிக அளவில் தகவல் தொழில்நுட்பத் துறையிலும், கேட்டரிங் துறையிலும்தான் பணியிடங்கள் காலியாக உள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
கேட்டரிங் துறையைப் பொருத்தவரை, உடனடியாக திறமை மிக்கப் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள் என அத்துறை சார் தொழில்துறைக் கூட்டமைப்பு ஒன்றின் தலைவரான Claude Meier தெரிவித்துள்ளார்.
பெருந்தொற்றுக்கு முன்பே பணியாளர்கள் கிடைப்பது கடினமாக இருந்தது. இப்போது நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது என்கிறார் அவர்.
ஆனால், ஆட்கள் தேவைப்படுவது இந்த துறைகளுக்கு மட்டுமல்ல.
சுகாதாரத்துறை, கட்டுமானத்துறை, சேல்ஸ் ஆகிய துறைகள், மேலும், எலக்ட்ரீஷியன்கள், மர வேலை செய்வோர் மற்றும் தோட்டவேலை செய்வோருக்கும் அதிக அளவில் டிமாண்ட் உள்ளது. திறமை உடைய பணியாளர்கள் கிடைப்பது பெரிய பிரச்சினையாக உள்ளது. பயிற்சி பெற்ற பணியாளர்களை வலை வீசித் தேடி வருகிறோம் என்கிறார் மற்றொரு தொழில் துறைக் கூட்டமைப்பைச் சேர்ந்த Barbara Jenni.
மருத்துவத் துறையைப் பொருத்தவரை, 13,000க்கும் அதிகமான செவிலியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.
மேலும், தொழிற்சாலைகளிலும் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக நேரத்துக்கு தயாரிப்புகளை டெலிவரி செய்ய முடியாத நிலை காணப்படுகிறது என்கிறார் சுவிஸ் தொழிலாளர்கள் கூட்டமைப்பில் தலைமைப் பொருளாதார நிபுணராக இருக்கும் Simon Wey.
தகுதியுடையவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.