ஒரு குறிப்பிட்ட நாட்டு பணியாளர்களை ஈர்க்கத் துடிக்கும் சுவிஸ் நிறுவனங்கள்: காரணம் என்ன?
சுவிட்சர்லாந்தில் சில குறிப்பிட்ட துறைகளில் பணியாளர் பற்றாக்குறை நிலவும் நிலையில், ஒரு குறிப்பிட்ட நாட்டு பணியாளர்களை பணிக்கமர்த்த ஆர்வம் காட்டுகின்றன சுவிஸ் நிறுவனங்கள்.
என்ன கேட்டாலும் தரத் தயார்
சுவிட்சர்லாந்தில் சில குறிப்பிட்ட துறைகளில் பணியாளர் பற்றாக்குறை நிலவும் நிலையில், அமெரிக்க நாட்டவர்களை பணிக்கமர்த்த ஆர்வம் காட்டுகின்றன சுவிஸ் நிறுவனங்கள். மருந்தகத் துறை ஜாம்பவான்களாக நோவார்ட்டிஸ் மற்றும் Roche முதலான நிறுனங்கள், தங்கள் நிறுவனங்களின் முக்கியப் பொறுப்புகளுக்கு அமெரிக்கர்களை நியமிக்க பேரார்வம் காட்டி வருகின்றன.
அப்படி தங்கள் நிறுவனங்களுக்குப் பணிக்கு வரும் அமெரிக்கர்களுக்கான வீட்டு வாடகை, பிள்ளைகளின் கல்விக்கட்டணம், வரிகள், மருத்துவக் காப்பீடு முதலான அனைத்து செலவுகளையும் ஏற்கவும் அந்நிறுவனங்கள் தயாராக உள்ளன.
எதனால் அமெரிக்கர்கள் மீது அதீத ஆர்வம்?
மருந்தகத் துறை நிறுவனங்கள் போன்ற பெரிய நிறுவனங்களில், சில பெரிய பொறுப்புகளை ஏற்க தகுதியான நபர்கள் உள்நாட்டில் கிடைப்பது அரிதாக உள்ளது. ஆனால், அமெரிக்காவில் இந்த துறைகளில் தகுதி வாய்ந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆகவேதான் அமெரிக்கர்களைக் கவர்ந்திழுக்க இந்த நிறுவனங்கள் எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக உள்ளன என்று கூறுகிறார் துறை சார்ந்தவரான Erik Wirz என்பவர்.
இந்நிலையில், இப்படி அந்த தகுதி வாய்ந்த அமெரிக்கர்களுக்காக செய்யும் செலவு தகுதியானதே என்று கூறுகிறார், Roche நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர். எங்களைப் பொருத்தவரை, எங்கள் பணியாளர்கள் திறமை மிக்கவர்களாக இருக்கவேண்டும், அதற்காகவே அவர்கள் எந்த வம்சாவளியினர் என்பதையெல்லாம் பார்க்காமல், திறமை வாய்ந்தவர்களை ஈர்க்க விரும்புகிறோம் என்கிறார் அவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |