1,400 பேரை வீட்டுக்கு அனுப்பும் சுவிஸ் நிறுவனம்: அதிகம் பாதிக்கப்படப்போவது இவர்கள்தான்...
சுவிஸ் நிறுவனமான Novartis, 1,400 பேரை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.
அவர்களில் அதிகம் பாதிப்புக்குள்ளாக இருப்பது தலைமைத்துவப் பொறுப்புகளில் இருப்பவர்கள்தான்.
நீண்ட காலமாகவே Novartis நிறுவனம் தனது ஊழியர்களின் எண்ணிக்கையை பெருமளவில் குறைக்க இருப்பதாக வதந்திகள் உலவிக்கொண்டிருந்தன.
இரண்டு மாதங்களுக்கு முன், அந்த வதந்திகளை உண்மையாக்கியது அந்த நிறுவனம். ஆம், ஒரு பில்லியன் டொலர்களை சேமிப்பதற்காக, தனது ஊழியர்களின் எண்ணிக்கையை 108,000இலிருந்து 100,000ஆக குறைக்க முடிவுசெய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது Novartis.
அதாவது, 8,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புவதாக Novartis அறிவித்தது.
அந்த 8,000 பேரில், 1,400 பேர் சுவிட்சர்லாந்தில் பணிபுரிபவர்கள். அதுவும், பாதிக்குப் பாதி, தலைமைத்துவப் பொறுப்புகளில் இருப்பவர்கள்தான் பாதிப்புக்குள்ளாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Photo by Harold Cunningham/Getty Images