லிஸ்பன் Funicular ரயில் விபத்து: சுவிஸ் வெளியுறவு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி
லிஸ்பன் Funicular ரயில் விபத்தில் சுவிஸ் குடிமகள் ஒருவர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுவிஸ் வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
சுவிஸ் குடிமகள் ஒருவர் உயிரிழப்பு
போர்ச்சுகல் தலைநகரான லிஸ்பன் நகரில் நிகழ்ந்த Funicular ரயில் விபத்தில், சுவிஸ் குடிமகள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
The FDFA confirms with sadness that a Swiss citizen lost her life and another was injured in the Gloria funicular accident in Lisbon on Wednesday, 3 September.
— Swiss MFA (@SwissMFA) September 5, 2025
Our thoughts are with all the victims as well as with all those who lost someone in this tragedy. https://t.co/x7NQfJjIdR
அத்துடன், மற்றொரு சுவிஸ் குடிமகள் காயமடைந்துள்ளதாகவும் சுவிஸ் வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
தனியுரிமை கருதி அவர்களுடைய பெயர்கள் முதலான விவரங்கள் வெளியிடப்படவில்லை.
புதன்கிழமையன்று, அதாவது, செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி, போர்ச்சுகல் தலைநகரான லிஸ்பன் நகரில் Funicular ரயில் ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 16 பேர் உயிரிழந்துள்ளார்கள், 21 பேர் காயமடைந்துள்ளார்கள்.
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பத்து நாடுகளைச் சேர்ந்தவர்கள் இருப்பதாக போர்ச்சுகல் அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |