சுவிட்சர்லாந்துக்கு குழப்பத்தை உருவாக்கியுள்ள ட்ரம்பின் வரிவிதிப்பு
ட்ரம்பின் வரிவிதிப்பு, சுவிட்சர்லாந்துக்கு குழப்பத்தை உருவாக்கியுள்ளது.
குழப்பத்தை உருவாக்கியுள்ள ட்ரம்பின் வரிவிதிப்பு
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், உலக நாடுகள் பலவற்றிலிருந்து அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரிகள் விதித்துள்ளார்.
அமெரிக்க பொருட்களுக்கு மற்ற நாடுகள் எவ்வளவு வரி விதிக்கின்றனவோ, அந்த வரியில் பாதியை அந்த நாடுகளுக்கு அமெரிக்கா விதிக்கும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அவ்வகையில், சுவிட்சர்லாந்து அமெரிக்கப் பொருட்களுக்கு 61 சதவிகித வரி விதிப்பதாகக் கூறி, சுவிட்சர்லாந்துக்கு 31 சதவிகித வரி அறிவித்துள்ளார் ட்ரம்ப். ஆனால், அதனால் சுவிட்சர்லாந்து குழப்பமடைந்துள்ளது.
காரணம் என்னவென்றால், சுவிட்சர்லாந்து சரக்குகள் மீதான வரிகளையே ஒழித்துவிட்டது.
அப்படியிருக்கும் நிலையில், சுவிட்சர்லாந்து அமெரிக்கப் பொருட்களுக்கு 61 சதவிகித வரி விதிப்பதாகக் கூறி, சுவிட்சர்லாந்துக்கு 31 சதவிகித வரி அறிவித்துள்ளார் ட்ரம்ப்.
வரிகள் தொடர்பான அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, ட்ரம்பின் வரிவிதிப்பு தொடர்பில் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து சுவிஸ் அரசு விரைந்து முடிவெடுக்க இருப்பதாக சுவிஸ் ஜனாதிபதியான Karin Keller-Sutter தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |