சுவிட்சர்லாந்தில் மற்ற கொரோனா வைரஸ்களை வேகமாக முந்தும் Omicron வகை வைரஸ்
சுவிட்சர்லாந்தில், டெல்டா வகை வைரஸ் முதலான மற்ற கொரோனா வைரஸ்களை Omicron வகை கொரோனா வைரஸ் முந்திவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளவர்களில் 55 சதவிகிதம்பேர் Omicron வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதாவது, பெரும்பான்மை கொரோனா நோயாளிகள், Omicron வகை கொரோனா வைரஸால்தான் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
குறிப்பாக, இத்தாலி எல்லையை ஒட்டி அமைந்திருக்கும் Ticino மாகாணம் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்றாலும், Omicron வகை கொரோனா வைரஸ், மற்ற மாகாணங்களுக்கும் வேகமாக பரவிவருவதாக நேற்று முன்தினம் பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
Omicron வகை கொரோனா வைரஸ், டெல்டா வகை வைரஸை விட வேகமாக பரவுவதுடன், அவ்வகை கொரோனா தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை மூன்றிலிருந்து ஐந்து நாட்களுக்குள் இரட்டிப்பாகியும் வருகிறது.
Omicron வகை கொரோனா வைரஸின் வேகமாக பரவும் தன்மை காரணமாக, இனி சுவிட்சர்லாந்தில் கொரோனா தொற்றுக்கு ஆளாகுவோர் அனைவருமே Omicron வகை கொரோனா வைரஸால்தான் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என அதிகாரிகள் கருதுகிறார்கள்.
சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, அதிக அளவில் கொரோனா தொற்று காணப்படுகிறது. நாளொன்றிற்கு 13,000 பேர் வரை கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகிறார்கள். இது ஐரோப்பாவிலேயே உயர்ந்த அளவிலான தொற்று எண்ணிக்கையாகும்.
20 வயதுக்கும் 29 வயதுக்கும் இடையிலானவர்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். தற்போது 336 கொரோனா நோயாளிகள் தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இதுதான் சுவிட்சர்லாந்தின் தற்போதைய கொரோனா தொற்று சூழல்...