சுவிட்சர்லாந்தில் கனேடியர் மீது வரி மோசடி வழக்கு: தீர்ப்பை மாற்றிய நீதிமன்றம்
வரி மோசடி செய்ததாக அபராதம் விதிக்கப்பட்ட கனேடியர் ஒருவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை சுவிஸ் ஃபெடரல் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது.
மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட கனேடியர்
சுவிட்சர்லாந்தின் வாட் மாகாணத்திலுள்ள லோசான் நகரில் 15 ஆண்டுகளாக வாழ்ந்துவருகிறார் கனேடியர் ஒருவர்.
அவர் வரி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் லோசான் மாவட்ட நீதிமன்றம் 72 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளுக்கும் அதிகமான தொகையை அபராதமாக விதித்தது.
ஆனால், 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம், குற்றம் சாட்டப்பட்டவரின் தரப்பு நியாயம் கேட்கப்படவேண்டும் என்னும் மனித உரிமைகள் விதி மீறப்பட்டுள்ளதாகக் கூறி அந்த தீர்ப்பை ஃபெடரல் உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டது.
இந்நிலையில், நேற்று, குற்றவியல் சட்ட முதல் நீதிமன்றமும், வாட் நீதிமன்ற தீர்ப்பை மீண்டும் நிராகரித்துள்ளது.
2021ஆம் ஆண்டு ஜூன் மாதம், இதே நபர் மீது இதேபோன்றதொரு வழக்கைத் தொடுத்துள்ளார்கள் அதிகாரிகள்.
ஆக, ஒரே குற்றத்துக்காக ஒருவரை இருமுறை தண்டிக்கமுடியாது என்னும் ’Ne bis in idem’ என்னும் கொள்கையின்படி, அந்த கனேடியரை மீண்டும் தண்டிக்கமுடியாது என்று கூறி தீர்ப்பை ரத்து செய்துள்ளார்கள் நீதிபதிகள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |