இரண்டு சிறுபிள்ளைகள் கொண்ட அகதிக் குடும்பத்தை வெளியேற உத்தரவிட்டுள்ள சுவிட்சர்லாந்து
இரண்டு சிறுபிள்ளைகள் கொண்ட அகதிக்குடும்பம் ஒன்றை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது சுவிஸ் நீதிமன்றம் ஒன்று.
சுவிஸ் நீதிமன்றத்தின் உத்தரவு
இரண்டு சிறுபிள்ளைகளைக் கொண்ட ஆப்கன் குடும்பம் ஒன்று சுவிட்சர்லாந்தில் வாழ்ந்துவந்த நிலையில், அவர்களை கிரீஸ் நாட்டுக்குச் செல்லுமாறு சுவிஸ் ஃபெடரல் நிர்வாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விடயம் என்னவென்றால், அந்தக் குடும்பத்துக்கு கிரீஸ் நாட்டில் அகதி நிலை வழங்கப்பட்டுள்ள நிலையிலும், அங்கு அகதிகள் நிலைமையில் முன்னேற்றம் இல்லை என்று கூறி சுவிட்சர்லாந்திலேயே தங்கியிருக்க அனுமதி கோரியிருந்தது அந்தக் குடும்பம்.
ஆனால், கிரீஸ் நாட்டில் அகதிகள் நிலைமையில் முன்னேற்றம் இல்லை என்பது உண்மைதான் என்றாலும், அங்கு வாழும் சூழல் கடினமாக இருக்கும் என்பதை மட்டுமே காரணமாக காட்ட முடியாது என்றும், கிரீஸ் நாட்டில் வாழ முயற்சி செய்தும் அங்கு தங்களால் நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ளமுடியவில்லை என்பதை நிரூபிக்கவேண்டும் என்றும் கூறிவிட்டது சுவிஸ் ஃபெடரல் நிர்வாக நீதிமன்றம்.
மொழி தெரியவில்லை என்றால் மொழிபெயர்ப்பு apps பயன்படுத்தலாம் அல்லது மொழிபெயர்ப்பாளர்கள் உதவியை நாடலாம் என்றும், தேவையானால் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களின் உதவியை நாடலாம் என்றும் கூறியுள்ளது நீதிமன்றம்.
ஆக, கிரீஸ் நாட்டில் அந்தக் குடும்பத்துக்கு ஏற்கனவே அகதி நிலை வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அங்கு சென்றேயாகவேண்டும் என நீதிமன்றம் கூறிவிட்டது.
சுவிஸ் ஃபெடரல் நிர்வாக நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது என்பதால், அந்தக் குடும்பம் மேல்முறையீடும் செய்ய இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |