குடும்ப சண்டைக்கு DNA பரிசோதனையா? கண்டித்த சுவிஸ் நீதிமன்றம்
சுவிட்சர்லாந்தில், ஒருவர் தன் குடும்ப உறுப்பினர்களை மிரட்டியதாக கூறப்படும் வழக்கில், அவருக்கு DNA பரிசோதனை செய்ய கீழ் நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டதை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.
குடும்ப சண்டைக்கு DNA பரிசோதனையா?
குடும்ப உறுப்பினர்களை மிரட்டியதாக கூறப்படும் வழக்கில், ஒருவருக்கு DNA பரிசோதனை செய்வது முறையற்றது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், DNA பரிசோதனை தேவையில்லை என கூறிவிட்டது.

வீட்டில் நடக்கும் வழக்கமான சண்டை தவிர்த்து அந்த நபருக்கு வேறு குற்றச்செயல்களுடன் தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் கூறிவிட்டது.
சமீப காலமாக, தொடர்ந்து இதுபோன்று சிறிய வழக்குகளில் DNA பரிசோதனை கோரப்படும் விடயம் கவலையை உருவாக்கியுள்ள நிலையில், உச்சநீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |