நாடுகடத்தப்பட்ட வெளிநாட்டவர் மரணம்: சுவிட்சர்லாந்தில் உருவாகியுள்ள சர்ச்சை
உக்ரைன் நாட்டவர் ஒருவர் சுவிட்சர்லாந்திலிருந்து நாடுகடத்தப்பட்ட நிலையில் மரணமடைந்துவிட்டார்.
இந்நிலையில், போர் நடக்கும் ஒரு நாட்டுக்கு அவரை நாடுகடத்துவது தொடர்பில் சுவிஸ் அரசு எடுத்த முடிவை சுவிஸ் உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது!
நாடுகடத்தப்பட்ட வெளிநாட்டவர் மரணம்
சுவிட்சர்லாந்தின் சூரிக் மாகாணத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்துவந்தவர், உக்ரைன் நாட்டவரான Vladyslav Lanish (29).

2024ஆம் ஆண்டு, Lanish உக்ரைனுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார். அவரை நாடுகடத்துவதால் அவருக்கு ஆபத்து ஏற்படலாம் என நீதிமன்றம் ஒன்று எச்சரித்த நிலையிலும், எச்சரிக்கையை மீறி அதிகாரிகள் அவரை நாடுகடத்தியுள்ளார்கள்.
விடயம் என்னவென்றால், Lanish போருக்குத் தப்பி சுவிட்சர்லாந்துக்கு வந்தவர் அல்ல. அவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சுவிட்சர்லாந்தில் வாழ்ந்துவருகிறார்.
Lanish போதைக்கு அடிமையாகி, அதிலிருந்து விடுபட போராடிக்கொண்டிருந்த நிலையில்தான் அவரை நாடுகடத்தியுள்ளார்கள் அதிகாரிகள்.
உக்ரைன் சென்ற Lanish, மரணமடைந்துவிட்டார். அவர் போதைப்பொருள் அதிக அளவில் எடுத்துக்கொண்டதால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
Lanish மரணம் தொடர்பில் சர்ச்சை எழுந்ததும், தனது நாடுகடத்தலை தாமதிக்கக்கோரி அவர் முறைப்படி விண்ணப்பிக்கவில்லை என அதிகாரிகள் வாதம் முன்வைத்துள்ளார்கள்.
என்றாலும், அவரை நாடுகடத்த சுவிட்சர்லாந்து எடுத்த முடிவை விமர்சித்துள்ள சுவிஸ் உச்சநீதிமன்றம், அவரை நாடுகடத்த முடிவு செய்தபோது, மனித உரிமை மீறல் தொடர்பான விடயங்களையாவது அதிகாரிகள் கருத்தில் கொண்டிருக்கவேண்டும் என்று கூறியுள்ளது.
இந்த வழக்கு சுவிட்சர்லாந்தில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையில், சுவிட்சர்லாந்தின் நாடுகடத்தல் கொள்கை குறித்து, குறிப்பாக, போர் நடக்கும் நாடுகளுக்கு மக்களைத் திருப்பி அனுப்புவது குறித்து பெரிய அளவில் கேள்விகள் எழுந்துள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |