சுவிட்சர்லாந்தில் பசுக்களிடையே பரவும் நோய்: மர்மம் விலகியது
சுவிட்சர்லாந்தில் பசுக்களிடையே பரவி வரும் மர்ம நோய் எதனால் ஏற்படுகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது.
ஆல்ப்ஸ் மலையில் மாடுகளுக்கு சரியான மேய்ச்சல் இல்லாததால் ஏற்கனவே பல விவசாயிகள் இழப்பை எதிர்கொண்டுவரும் நிலையில், தற்போது பசுக்களிடையே பரவிவரும் மர்ம நோய் ஒன்று அவர்களுடைய பிரச்சினையை அதிகமாக்கியுள்ளது.
இந்நிலையில், அது என்ன நோய் என்பதை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள்!
பசுக்களிடையே பரவும் நோய்
சுவிஸ் விவசாயிகள் பலர், தங்கள் பசுக்களுக்கு காய்ச்சலும், வயிற்றுப்போக்கும் ஏற்பட்டுள்ளதாகவும், பசுக்கள் கொடுக்கும் பாலின் அளவு குறைந்துள்ளதாகவும் புகார் தெரிவித்திருந்தார்கள்.

விடயம் என்னவென்றால், என்னவென்றே தெரியாத ஒரு காய்ச்சல் அல்லது வயிற்றுபோக்கு பசுக்களுக்கு ஏற்படுமானால், அது பயங்கர தொற்றுநோய் ஒன்றின் அறிகுறியாக இருக்கலாம் என்பதே அச்சத்தையூட்டும் விடயம்!
அதைத் தொடர்ந்து, சுவிஸ் அதிகாரிகள், பசுக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த மர்ம நோய் என்ன என்பதைக் கண்டறியும் முயற்சியில் தீவிரமாக இறங்கினார்கள்.
மர்மம் விலகியது உண்மை என்னவென்றால், நோயை ஏற்படுத்தும் கிருமி எது என்பது தெரிந்துவிட்டாலே, பிரச்சினையில் பெரும் பகுதி சரியாவிடும் என்பது மருத்துவ உலகுக்கு பரிச்சயமான விடயம்.
ஆக, அவ்வகையில், தற்போது சுவிட்சர்லாந்தில் பசுக்களிடையே பரவி வரும் நோய்க்கு என்ன காரணம் என்பதை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள்.

ஆம், Orthobunyavirus என்னும் ஒரு வைரஸின் துணைப்பிரிவான வைரஸ் ஒன்றே இந்த நோயை உருவாக்குகிறது என்பதை வைரஸ் மற்றும் நோய் எதிர்ப்பியல் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
இந்த நோய், midges என்னும், இரத்தத்தை உறிஞ்சும் சிறிய பூச்சிகள் மூலம் பரவுகிறது.
இந்த நோய், விலங்குகளுக்கு ஏற்படும் நோய்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ள நோயோ, ’விலங்கு நோய்கள் அவசரச் சட்டத்தின்’ கீழ் பட்டியலிடப்பட்டுள்ள நோயோ அல்ல.
அது, பயங்கர தொற்று நோயும் அல்ல, அதனால், மனிதர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பும் ஏற்படாது என்பதும் உறுதியாகியுள்ளது. எனவே, தங்கள் பசுக்களில் வழக்கத்துக்கு மாறான நோய் அறிகுறிகள் ஏதாகிலும் தென்பட்டால், உடனடியாக கால்நடை மருத்துவரை அணுகுமாறு விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |