சுவிட்சர்லாந்தில் குறையும் குற்றங்களின் போக்கு: வெளியான முக்கிய புள்ளிவிவரம்
சுவிட்சர்லாந்தில் குற்றங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வகையில் குறைந்து இருப்பதாக சமீபத்திய தரவுகளில் தெரியவந்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் குறையும் குற்றங்கள்
2025ம் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் குற்றங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வகையில் குறைந்து இருப்பதாக சுவிஸ் கூட்டாட்சி புள்ளியியல் அலுவலகம்(FSO) சமீபத்தில் வெளியிட்ட தரவுகளில் தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் குற்றப் பதிவு முறைகள் உருவாக்கப்பட்ட 2009 ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ம் ஆண்டில் குற்றங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வகையில் குறைந்துள்ளது.
2009ம் ஆண்டு 1,000 குடிமக்களுக்கு 72 குற்றங்கள் என்ற எண்ணிக்கையில் இருந்த குற்ற விகிதம் 2025ம் ஆண்டு 61 ஆக குறைந்துள்ளது.

சொத்து தொடர்பான குற்றங்களில்(1,54,041 சொத்து குற்ற வழக்குகள்) திருட்டு சம்பவம் முதலிடத்தில் இருக்கும் நிலையில், 2024 ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ம் ஆண்டின் மொத்த சொத்து குற்றங்களின் எண்ணிக்கை 5.3% ஆக குறைந்துள்ளது.
அதைப்போல டிஜிட்டல் குற்றங்கள் 2025ம் ஆண்டு 2% வரை குறைந்துள்ளது. பெரும்பாலான சைபர் குற்றங்கள் பண மோசடி தொடர்பான குற்றங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் வன்முறை குற்றங்கள்
பொதுவான குற்ற விகிதம் குறைந்து இருந்தாலும், சுவிட்சர்லாந்தில் வன்முறை குற்றங்கள் அதிகரித்துள்ளன.
இந்த ஆண்டு மொத்தம் 49,915 வன்முறை குற்றங்கள் பதிவாகியுள்ளன, இது கடந்த 2024 ம் ஆண்டை விட 2% அதிகமாகும். இதில் கடுமையான வன்முறை குற்றங்கள் 8.1 % வரை அதிகரித்துள்ளது.
மேலும் இந்த ஆண்டு இதுவரை 92,000 பேர் மீது குற்றவியல் சட்டத்தை மீறியதற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |