சுவிஸ் சுற்றுலா செல்வோருக்கு ஒரு எச்சரிக்கை
சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா செல்பவர்கள் எதையெல்லாம் கொண்டுசெல்லக்கூடாது என்பது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா செல்பவர்கள் எதையெல்லாம் கொண்டுசெல்லக்கூடாது என்பது குறித்து சுவிஸ் சுங்க அதிகாரிகள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.
சுவிஸ் சுற்றுலா செல்வோருக்கு ஒரு எச்சரிக்கை
சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா வருபவர்கள், போலி ஆடம்பர கைப்பைகள், கைக்கடிகாரங்கள் மற்றும் நகைகளைக் கொண்டுவரக்கூடாது என்றும், அப்படிக் கொண்டுவந்தால் அவை பறிமுதல் செய்து அழிக்கப்படும் என்றும் சுவிஸ் சுங்க அதிகாரிகள் எச்சரித்துள்ளார்கள்.

அத்துடன், 10,000 சுவிஸ் ஃப்ராங்குகளுக்கு மேல் ரொக்கமோ அல்லது பத்திரங்களோ கொண்டு வந்தால், அது குறித்து கேட்கப்பட்டால் தெரியப்படுத்தவேண்டும் என்றும், 150 சுவிஸ் ஃப்ராங்குகளுக்கு அதிக தொகையுடைய பொருட்கள் வாங்கினால், அதற்கு மதிப்புக் கூட்டு வரி செலுத்தவேண்டியிருக்கும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளார்கள்.
மேலும், பவளம், சிப்பிகள், தந்தம், குறிப்பிட்ட மரங்கள் அல்லது தாவரங்கள் போன்ற பாதுகாக்கப்பட்ட உயிரினங்களிலிருந்து தயாரிக்கப்படும் நினைவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், அபராதங்களும் விதிக்கப்படலாம் என்றும் சுவிஸ் சுங்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |