சுவிஸ் சைபர் தாக்குதல்கள்: ஆதாரங்கள் சுட்டிக் காட்டும் நாடு
சமீப காலமாக சுவிட்சர்லாந்து சைபர் தாக்குதல்கள் பலவற்றை எதிர்கொண்டுவரும் நிலையில், அவற்றின் பின்னணியிலிருக்கக்கூடும் என ஒரு நாட்டை ஆதாரங்கள் சுட்டிக் காட்டியுள்ளன.
தொடர் சைபர் தாக்குதல்கள்
சுவிஸ் பெடரல் அரசின் இணையதளங்கள் பல சமீப காலமாக சைபர் தாக்குதல்களுக்கு ஆளாகிவருகின்றன. சுவிஸ் ரயில் சேவை பாதிக்கப்பட்டது, ஒன்லைன் பயணச்சீட்டு விற்பனை தற்காலிகமாக முடக்கபட்டது.
Photo by Tima Miroshnichenko on Pexels.com
பெடரல் நாடாளுமன்ற இணையதளம் கடந்த வாரம் சைபர் தாக்குதலுக்குள்ளானது. ஊடக இணையதளங்கள் இரண்டு சில வாரங்களுக்கு முன் சைபர் தாக்குதலுக்குள்ளாகின.
பின்னணியில் இருப்பதாக கருதப்படும் நாடு
இந்த சைபர் தாக்குதல்களின் பின்னால் இருப்பவர்களைக் கண்டுபிடிப்பது கடினம். என்றாலும், சமீபத்திய சைபர் தாக்குதல் ஒன்றிற்கு NoName என்னும் ஒரு அமைப்பு பொறுப்பேற்றது.
சுவிட்சர்லாந்து ரஷ்யாவுக்கெதிராக தடைகள் விதித்ததில் சுவிட்சர்லாந்துக்கு இருக்கும் பங்கு குறித்து அந்த அமைப்பு விமர்சித்திருந்தது.
ஆகவே, இந்த சைபர் தாக்குதல்களின் பின்னால், குறைந்தது ஒரு தாக்குதலின் பின்னணியிலாவது ரஷ்யா இருக்கலாம் என சுவிட்சர்லாந்து கருதுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |