போர் வந்தால் சுவிட்சர்லாந்தால் தாக்குப் பிடிக்கமுடியுமா? பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறும் தகவல்
போர் வந்தால், சுவிட்சர்லாந்தால் தன்னை தற்காத்துக்கொள்ளமுடியும். ஆனால், அனைத்து அச்சுறுத்தல்களிலுமிருந்தும் பாதுகாக்க முடியாது என்கிறார் சுவிஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர்.
போர் வந்தால்...
ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதுமே பல நாடுகள் தங்கள் பாதுகாப்பு குறித்து சிந்திக்கத் துவங்கிவிட்டன.
இந்நிலையில், போலந்து நாட்டுக்குள் ரஷ்ய ட்ரோன்கள் ஊடுருவிய விடயம், பல நாடுகளை பாதுகாப்புத் தொடர்பில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கத் தூண்டியுள்ளது.
சமீபத்தில் பாதுகாப்பு தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுவிஸ் பாதுகாப்புத்துறை அமைச்சரான மார்ட்டின் (Martin Pfister), சுவிஸ் ராணுவம் இன்னமும் தன்னை தயார்படுத்திக்கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொண்டவண்ணம்தான் உள்ளது என்று கூறியுள்ளார்.
அதாவது, போலந்தில் ஊடுருவிய ட்ரோன்களைப்போல ட்ரோன்கள் நுழைந்தால் அவற்றை எதிர்த்து தாக்கி அழிக்கும் ஆயுதங்கள் சுவிட்சர்லாந்திடம் இல்லை என்று கூறியுள்ளார் அமைச்சர் மார்ட்டின்.
[]
அத்துடன், தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளும் சுவிட்சர்லாந்திடம் இல்லை என்று கூறியுள்ள அவர், அவை ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும், என்றாலும், இன்னமும் அவை வந்து சேரவில்லை என்றும் கூறியுள்ளார்.
ராணுவத்துக்காக போர் விமானங்களை வாங்க சுவிட்சர்லாந்து திட்டமிட்டுள்ள நிலையில், அவற்றின் விலை குறித்த சர்ச்சை நிலவிவருவதாகவும் தெரிவித்துள்ளார் மார்ட்டின்.
போர் விமானங்கள் குறித்த விடயத்தில் மட்டும் பிரச்சினை இல்லை, ட்ரோன்கள் விடயத்திலும் பிரச்சினைதான். சுவிஸ் ராணுவத்தில் இருக்கும் ட்ரோன்கள் குளிர்காலத்தில் பயன்படுத்த உகந்தவை அல்ல என்றும் கூறியுள்ளார் மார்ட்டின்.
ஆக, அவர் கூறுவதுபோலவே, சுவிட்சர்லாந்து அனைத்து அச்சுறுத்தல்களிடமிருந்தும் தன்னைக் காத்துக்கொள்ளும் நிலையில் உள்ளதா என்றால், அது கேள்விக்குறியே!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |