நீண்ட நாள் வதந்தி உண்மையானது... சுவிஸ் அமைச்சர் ஒருவர் ராஜினாமா
சுவிஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்யலாம் என நீண்ட நாட்களாக வதந்திகள் பரவிவந்த நிலையில், அந்த வதந்தி தற்போது உண்மையாகியுள்ளது.
சுவிஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜினாமா
சுவிஸ் பாதுகாப்புத்துறை அமைச்சரான வயோலா ஆம்ஹெர்ட் (Viola Amherd) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சுவிட்சர்லாந்தை சுவிஸ் ஃபெடரல் கவுன்சில் என்னும் ஒரு அமைப்பு ஆட்சி செய்வதை பலரும் அறிந்திருக்கலாம்.
ஏழு பேர் கொண்ட அந்த கவுன்சிலின் உறுப்பினர்களில் ஒருவர், ஒரு ஆண்டுக்கு ஜனாதிபதியாக பொறுப்பு வகிப்பார். அப்படி, ஏழு பேரும் மாறி மாறி ஜனாதிபதியாக பொறுப்பு வகிப்பார்கள்.
அவ்வகையில், கடந்த ஆண்டு, அதாவது, 2024ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் வரை சுவிஸ் ஜனாதிபதியாக பொறுப்பு வகித்துவந்தார் வயோலா.
2019ஆம் ஆண்டு முதல் சுவிஸ் அரசில் பொறுப்பு வகித்துவந்த வயோலா, மார்ச் மாதம் பதவி விலக இருக்கிறார்.
சுவிஸ் ராணுவத்துக்கு உபகரணங்கள் வாங்கியது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமர்சனங்கள் முன்வைத்திருந்த நிலையில் வயோலா ராஜினாமா செய்துள்ளார்.
ஆனால், பிரச்சினைக்கு காரணமான ராணுவம் தொடர்பான திட்டங்களில் சில, வயோலா பாதுகாப்புத்துறை அமச்சராக பொறுப்பேற்பதற்கு முன்பே திட்டமிடப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |