சாலை விபத்தை ஏற்படுத்திய வெளிநாட்டவருக்கு குடியுரிமை மறுப்பு: சுவிஸ் உச்ச நீதிமன்றம் அதிரடி
சுவிட்சர்லாந்தில் சாலை விபத்தை ஏற்படுத்திய வெளிநாட்டவருக்கு குடியுரிமை மறுக்கப்பட்ட நிலையில், சுவிஸ் ஃபெடரல் நீதிமன்றம் அந்த வெளிநாட்டவருக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
சாலை விபத்தை ஏற்படுத்திய வெளிநாட்டவருக்கு குடியுரிமை மறுப்பு
துருக்கி நாட்டவரான 60 வயது நபர் ஒருவர் 30 ஆண்டுகளுக்கு மேலாக சுவிட்சர்லாந்தில் வாழ்ந்துவரும் நிலையில், அவர் உணவகம் ஒன்றை நடத்திவருகிறார்.
ஜேர்மன் மொழி பேசுவதுடன், தனது மாகாண மக்களுடன் ஒன்றிணைந்து வாழ்ந்தும் வருகிறார்.
அதாவது, குடியுரிமை பெறுவதற்கான சகல நிபந்தனைகளுக்கும் உட்பட்டு வாழ்ந்துவருகிறார் அவர்.
ஆனால், 2020ஆம் ஆண்டு, கார் ஓட்டும்போது அவர் கண்ணயர, அவரது கார் விளக்குக்கம்பம் ஒன்றில் மோதியுள்ளது.
இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயங்களும் ஏற்படவில்லை, அவர் மது அருந்தியிருந்ததாகவும் தெரியவில்லை.
அவர் வாழ்ந்துவரும் Schwyz மாகாண அதிகாரிகள் அவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும், அபராதமும் விதித்தார்கள்.
அவர் ஏற்கனவே குடியுரிமைக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், அந்த விபத்தைக் காரணம் காட்டி அவருக்கு குடியுரிமை வழங்குவது ஐந்து ஆண்டுகளாக தள்ளிவைக்கப்பட்டது.
அதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்ய, குடியுரிமை பெறுவதற்கான மற்ற தகுதிகள் அவருக்கு இருக்கும் நிலையில், அவர் குடியுரிமை பெறுவதற்கு அந்த கார் விபத்து மட்டும் காரணமாக இருக்கக்கூடாது என கூறிவிட்டது ஃபெடரல் நீதிமன்றம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |