2,000க்கும் அதிகமான வெளிநாட்டவர்களை நாடுகடத்த உத்தரவிட்ட சுவிட்சர்லாந்து
சுவிஸ் நீதிமன்றங்கள், கடந்த ஆண்டு 2,000க்கும் அதிகமான வெளிநாட்டவர்களை நாடுகடத்த உத்தரவிட்டுள்ளன.
அதில், மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமானவர்கள் நாடுகடத்தப்பட்டுவிட்டதாக புலம்பெயர்தலுக்கான மாகாணச் செயலகம் தற்போது தெரிவித்துள்ளது.
2,000க்கும் அதிகமான வெளிநாட்டவர்கள்

2024ஆம் ஆண்டில், 2,000க்கும் அதிகமான வெளிநாட்டவர்களை நாடுகடத்த சுவிஸ் நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன.
அவர்களில் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமானவர்கள் நாடு கடத்தப்பட்டுவிட்டதாக புலம்பெயர்தலுக்கான மாகாணச் செயலகம் திங்கட்கிழமை வெளியிட்ட செய்தி ஒன்றில் தெரிவித்துள்ளது.
அப்படி நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டவர்களில் 80 சதவிகிதம் பேர் கட்டாயத்தின்பேரிலும், மீதமுள்ள 20 சதவிகிதம் பேர், தாமாக முன்வந்தும் வெளியேறியுள்ளனர்.
நாடுகடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 25 முதல் 34 வயது வரையிலான ஆண்கள். மேலும், அல்பேனியா நாட்டவர்கள்தான் அதிகம் நாடுகடத்தப்பட்டுள்ளார்கள்.
அவர்களுக்கு அடுத்தபடியாக, ரொமேனியா மற்றும் அல்ஜீரியா நாட்டவர்கள் அதிக அளவில் நாடுகடத்தப்பட்டுள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |