அடிக்கடி பாறைகள் பெயர்ந்து விழுவதால் பதற்றத்தில் வாழும் சுவிஸ் கிராம மக்கள்: வித்தியாசமான தீர்வு
சில மாதங்களுக்கு முன், சுவிஸ் கிராமம் ஒன்றில் வாழும் மக்கள் உடனடியாக வீடுகளை காலிசெய்ய உத்தரவிடபட்ட சம்பவம் நினைவிருக்கலாம்.
வீடுகளை காலிசெய்ய உத்தரவு
சுவிஸ் கிராமமான Brienz, மலை ஒன்றின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. பொதுவாகவே அந்த மலையிலிருந்து அவ்வப்போது பாறைகள் பெயர்ந்து, உருண்டு வருவதுண்டு.
ஆனால், சமீபத்தில் பிரம்மாண்ட பாறை ஒன்று உடைந்து உருண்டு வரும் அபாயம் உருவானதைத் தொடர்ந்து, அக்கிராம மக்கள் உடனடியாக வீடுகளை காலி செய்ய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
சுமார் இரண்டு மில்லியன் கியூபிக் மீற்றர் அளவுள்ள பிரம்மாண்ட பாறை உடைந்து விழும் நிலையில் இருந்ததே எச்சரிக்கை விடுக்கப்பட்டதற்குக் காரணம்.
தீர்வு காண வித்தியாசமான முடிவு
இந்நிலையில், இப்படி அடிக்கடி பாறைகள் பெயர்ந்து விழுவதைத் தடுக்க, Graubünden மாகாண நிலவியல் வல்லுநர்கள் திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளார்கள்.
அதாவது, அந்த மலையினூடாக சுரங்கம் ஒன்றை அமைத்தால், அந்த மலையிலிருந்து வடியும் நீர் வழிந்தோடிவிடும் என்றும், அதனால் பாறைகள் பெயர்ந்து விழுவது தவிர்க்கப்படும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.
அப்படி ஒரு சுரங்கம் அமைகவேண்டுமானால், அதற்கு 40 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் செலவு பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |