2024ல் மீண்டும் உயரும் மின்கட்டணம்: சுவிஸ் மின்சார நிறுவனம் கைவிரிப்பு
சுவிட்சர்லாந்தின் பிரெஞ்சு மொழி பேசும் பகுதியிலுள்ள மிகப்பெரிய மின்சார விநியோக நிறுவனம், ஏற்கனவே 2023ல் மின்கட்டணத்தை கிட்டத்தட்ட இரண்டு மடங்கு உயர்த்திய நிலையில், 2024ல் மேலும் மின்கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது.
மீண்டும் உயரும் மின் கட்டணம்
2024 ஜனவரி 1 முதல், பெடரல் அரசால் விதிக்கப்பட்ட இரண்டு விலை உயர்வுகள் அமலுக்கு வருகின்றன. ஒன்று VAT விகிதத்தில் அதிகரிப்பு, இது 7.7% லிருந்து 8% ஆக உயர உள்ளது.
இரண்டாவது, ஜனவரி 1 முதல், குளிர்கால ஆற்றல் சேமிப்புக்காக, பெடரல் அரசு ஒரு புதிய வரியை விதிக்க உள்ளது.
அதுபோக, பராமரித்தல் மற்றும் மேம்படுத்துதலுக்கான செலவுகளும் உள்ளன. இந்த செலவுகள் எல்லாம் சேர்ந்து மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்த இருக்கின்றன. மொத்தத்தில், 2024இல் மின் கட்டணம் மீண்டும் உயர உள்ளது.
ஆகவே, இந்த விடயங்களால்தான் மின் கட்டணம் உயர உள்ளது என்று கூறியுள்ள மின்சார விநியோக நிறுவனமான Romande Energie, மின் கட்டண உயர்வுக்கு தாங்கள் காரணம் இல்லை என்று கூறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |