சுவிஸ் மின் கட்டணம் 280% வரை உயரும்! குடிமக்களுக்கு அதிர்ச்சி தரும் தகவல்
சுவிட்சர்லாந்தில் அடுத்த ஆண்டு மின்சார கட்டணம் கிட்டத்தட்ட மும்மடங்கு அதிகரிக்கும்.
சராசரி மின்சார விலை இடத்தைப் பொறுத்து குறிப்பிடத்தக்க வித்தியாசத்துடன் 27% உயரும் என RTS தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் 2023-ஆம் ஆண்டில், சராசரியாக ஒரு வருடத்திற்கு 4,500 kWh உபயோகிக்கும் ஒரு குடும்பம், தங்கள் மின்சாரத்திற்காக ஒரு வருடத்திற்கு கூடுதலாக CHF 261 செலுத்த வேண்டும்.
இருப்பினும், நீங்கள் இருக்கும் இடத்தைப் பொறுத்து பெரிய வேறுபாடுகள் இருக்கும். Valais-ல் உள்ள ஒரு முனிசிபாலிட்டியான Zwischbergen-ல், 4500 kWhக்கு 2023-ல் CHF 383.05 செலவாகும்.
அதுவே St Gallen மாகாணத்தில் உள்ள Gaiserwald-ல் அதே அளவு மின்சாரத்திற்கு CHF 2,644.20 செல்வாக்கும். இது கிட்டத்தட்ட 7 மடங்கு அதிகமாகும்.
Aargau-ல் உள்ள ஓபர்லுன்கோஃபென் குடியிருப்பாளர்கள் மிகப்பெரிய விலை உயர்வுக்கு தங்களைத் தாங்களே தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அங்கு விலைகள் ஒரு kWhக்கு 15.1 முதல் 58.1 சென்ட் வரை உயரும், 4500 kWh-ன் விலை 280 சதவீதம் அதிகரித்து 678.50 சுவிஸ் பிராங்கிலிருந்து 2,614.50 சுவிஸ் பிராங்குகளாக இருக்கும்.
2023 ஆம் ஆண்டில், ஜெனீவாவில் ஒரு kWh-க்கு 24.22 சென்ட்கள் (4,500 kWh-க்கு 1,089.90 Swiss Francs), Vaud-ல் ஒரு kWh-க்கு 32 சென்ட்கள் (4,500 kWhக்கு 1,440 Swiss Francs) மற்றும் சூரிச்சின் பெரும்பாலான பகுதிகளில் 22 சென்ட்கள் (4,500 kWhக்கு 990 Swiss Francs) அதிகரிக்கும். Vaud மற்றும் Zurich நகராட்சிகள் முழுவதும் வேறுபாடுகள் இருக்கும்.