சுவிட்சர்லாந்தின் எலான் மஸ்குக்கு சிறை
சுவிட்சர்லாந்தின் எலான் மஸ்க் என அழைக்கப்படும் நபருக்கு, ஐந்தரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் எலான் மஸ்க்
எலான் மஸ்கைப்போல சிறிய சேட்டிலைட்கள் மற்றும் ஆட்கள் பயணிக்கும் விண்கலங்களை உருவாக்கும் திட்டத்துடன் 2012ஆம் ஆண்டு, Swiss Space Systems (S3) என்னும் ஏரோஸ்பேஸ் நிறுவனம் ஒன்றை உருவாக்கியதால், சுவிஸ் எலான் மஸ்க் என அழைக்கப்பட்டவர் பாஸ்கல் ஜாஸ்ஸி (Pascal Jaussi).

சுவிஸ் தொழிலதிபரான பாஸ்கலை நம்பி விண்வெளிக்குச் செல்ல செல்வந்தர்கள் விருப்பம் தெரிவிக்க, டிக்கெட் விற்பனை மட்டுமே 1.64 மில்லியனை எட்டியது.
ஆனால், ஒரு விண்கலம் கூட மக்களை ஏற்றிக்கொண்டு புறப்படவில்லை.
பாஸ்கல் தன் திட்டத்துக்காக எக்கச்சக்கமாக கடன் வாங்கிய நிலையில், அவரது நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டது.
மோசடிக் குற்றம் சாட்டப்பட்ட பாஸ்கலுக்கு எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க சட்டத்தரணிகள் நீதிமன்றத்தைக் கோரினார்கள்.
இந்நிலையில், Freiburg நீதிமன்றம் ஒன்று பாஸ்கலுக்கு ஐந்தரையாண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |