உக்ரைனிலுள்ள சுவிஸ் தூதரகம் தொடர்பில் வெளியுறவு அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து உக்ரைன் தலைநகர் கீவ்விலிருந்த தங்கள் தூதரகங்களை வெவ்வேறு நாடுகளுக்கு மாற்றின பல நாடுகள்.
அவ்வகையில், சுவிட்சர்லாந்தின் உக்ரைன் தூதரப்பணி, மால்டோவா மற்றும் ரொமேனியா நாடுகளிலிருந்த தூதரகங்களில் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், ரஷ்யா தனது முழுக்கவனத்தையும் கிழக்கு உக்ரைன் மீது திருப்பியதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாடாக மீண்டும் கீவ்விலுள்ள தங்கள் தூதரகங்களை திறக்கத் துவங்கியுள்ளன. .
சுவிட்சர்லாந்தும், மீண்டும் உக்ரைன் தலைநகர் கீவ்வில் தனது தூதரகப் பணிகளைத் தொடர உள்ளதாக சுவிஸ் வெளியுறவு அமைச்சரான Ignazio Cassis தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கான சுவிஸ் தூதரான Claude Wild மேலும் நான்கு தூதரக அலுவலர்களுடன் கீவ்வுக்கு திரும்ப இருப்பதாக அவர் தெரிவித்துள்ளதுடன், தூதரகத்தில் பணியாற்றி வந்த உள்ளூர் உக்ரைன் அலுவலர்களும் தங்கள் பணியைத் தொடரலாம் என அறிவித்துள்ளார்.
அதே நேரத்தில், மீண்டும் நிலைமை மோசமானால், தங்கள் தூதரக அலுவலர்களை உடனடியாக உக்ரைனிலிருந்து வெளியேற்ற திட்டம் தயாராக இருப்பதாகவும் சுவிஸ் வெளியுறவு அமைச்சரான Ignazio Cassis தெரிவித்துள்ளார்.