சுவிஸ் நாட்டவரின் வீட்டுத் தோட்டத்தில் கிடைத்த கோடிக்கணக்கில் மதிப்புடைய பொருட்கள்: பின்னணி
சுவிஸ் நாட்டவர் ஒருவரின் வீட்டுத் தோட்டத்திலுள்ள ஷெட் ஒன்றில், கோடிக்கணக்கில் மதிப்புடைய பொருட்கள் கிடைத்தன.
விசாரணையில், அதிரவைக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன.
சுவிஸ் நாட்டவரின் வீட்டுத் தோட்டத்தில்...
சுவிட்சர்லாந்திலுள்ள ஆடம்பரப் பொருட்கள் விற்பனை நிறுவனமான Chopard என்னும் நிறுவனத்தில் வேலை செய்துவந்துள்ளார் ஒருவர்.

அவரது வீட்டுத் தோட்டத்திலுள்ள ஷெட் ஒன்றில் 200,000 சுவிஸ் ஃப்ராங்குகள் மதிப்புடைய ஆடம்பரப் பொருட்கள் கிடைத்தன. இலங்கை மதிப்பில் அது 8,08,48,019.50 ரூபாய் ஆகும்.
விசாரணையில், தான் Chopard நிறுவனத்தில் 30 ஆண்டுகளாக வேலை செய்து வருவதாகவும், 2007ஆம் ஆண்டிலிருந்து தனக்கு ஊதிய உயர்வே கொடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார் அவர்.
ஆகவே, தனக்கு நிறுவனம் கொடுக்கவேண்டிய பணத்துக்கு பதிலாக, நிறுவனத்திலிருந்து, 280 ஆடம்பர பொருட்களை தான் எடுத்துக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள அவர் மீது திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |