தரையில் விழுந்து நொறுங்கிய சுவிஸ் விமானம்! சாதுரியமாக உயிர் தப்பிய விமானி
சுவிஸின் F-5 டைகர் போர் விமானம் விபத்துக்குள்ளானது என அந்நாட்டு மத்திய பாதுகாப்பு, சிவில் பாதுகாப்பு மற்றும் விளையாட்டுத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
புதன்கிழமை Obwalden மாகாணத்தில் உள்ள Melchsee-Frutt அருகே சுவிஸ் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானது என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Payerne-யிலிருந்து பயிற்சிக்காக புறப்பட்ட F-5 டைகர் போர் விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாது.
விமானத்தை ஓட்டிய விமானி விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன் இருக்கையிலிருந்து வெளியேறி பாராசூட் மூலம் உயிர்தப்பியதாகவும், அவருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை என அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
F-5 டைகர் போர் விமானத்தில் ஒரே ஒரு இருக்கை மட்டுமே கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Heute gegen 09:00 ist ein F-5 der Luftwaffe bei Melchsee-Frutt abgestürzt. Der Pilot blieb unverletzt.
— VBS - DDPS (@vbs_ddps) May 26, 2021
Der Tiger F-5 war in Payerne gestartet und befand sich auf Trainingsflug als Sparringpartner für die F/A-18 der Luftwaffe. Militärjustiz untersucht zurzeit die Unfallursache. pic.twitter.com/UO1K0MEdkl
எதனால் விபத்து ஏற்பட்டது என்பது குறித்த விவரங்கள் தற்போது வரை வெளியாகவில்லை. இராணுவ நீதிமன்றம் விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறது.