சுவிட்சர்லாந்தில் அதிகரித்துவரும் வேலையில்லாத் திண்டாட்டம்
சுவிட்சர்லாந்தில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துவருவதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.
அதிகரித்துவரும் வேலையில்லாத் திண்டாட்டம்
சுவிட்சர்லாந்தில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துவருவதாகவும், பட்டம் பெற்றவர்கள் பலரும்கூட பாதிக்கப்பட்டுவருவதாகவும் Tribune de Genève என்னும் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

தகவல் தொடர்புத் துறையில் வெளிநாட்டவர்களுக்கு பணி வழங்கப்படுவதும், செயற்கை நுண்ணறிவின் தாக்கமும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்திவருவதாக ETH Zurich நிறுவனம் மேற்கொண்ட ஆய்வொன்று தெரிவிக்கிறது.
குறிப்பாக, கல்வித்துறையிலும், மொழி ஆசிரியர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றுவோர் செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |