பொலிஸ் எனக் கூறி ஏமாற்றி பணம் பறிக்க முயன்ற நபர்கள்: சமயோகிதமாக சிக்கவைத்த முதியவர்
சுவிட்சர்லாந்தில், பொலிஸ் எனக்கூறி முதியவர் ஒருவரிடம் சிலர் பணம் பறிக்க முயல, சமயோகிதமாக செயல்பட்டு அவர்களை பொலிசில் சிக்கவைத்தார் அந்த முதியவர்.
பொலிஸ் எனக் கூறி பணம் பறிக்க முயன்ற நபர்கள்
சுவிட்சர்லாந்தின் வாட் மாகாணத்தில் வாழும் முதியவர் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது.

பேசியவர்கள், தாங்கள் பொலிஸ் என்றும், அவரது வங்கிக்கணக்கிலிருந்து யாரோ பணத்தை எடுத்துள்ளதாகவும், அதைக் கண்டுபிடிப்பதற்காக சில தகவல்கள் வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
ஆனால், அவர்கள் அந்த முதியவரின் கிரெடிட் கார்டு விவரங்கள், எவ்வளவு பணம், நகை வைத்துள்ளார் என்பது குறித்தெல்லாம் விசாரிக்க, அவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அவர்களை தங்கள் வீட்டுக்கு வருமாறு அழைத்த அவர், நிஜ பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.
மோசடியாளர்கள் இருவரும் அவரது வீட்டுக்கு வர, அவரது வீட்டில் பணம், விலைமதிப்புள்ள பொருட்கள் எதுவும் இல்லை என்பது அவர்களுக்குத் தெரியவந்துள்ளது.
அவர்கள் புறப்படவும், வீட்டுக்கு வெளியே ஏற்கனவே சாதாரண உடையில் நின்றுகொண்டிருந்த பொலிசார், அவர்கள் இருவரையும் கைது செய்ய முயல, அவர்கள் தப்பியோட, அவர்களை துரத்திப் பிடித்துள்ளார்கள் பொலிசார்.
விடயம் என்னவென்றால், அவர்கள் இதுபோல் முதியவர்களைக் குறிவைத்து ஏமாற்றும் ஒரு பெரிய கும்பலைச் சேர்ந்தவர்கள்.
அத்துடன், இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவர்கள் லோசான் மாகாணத்தில் ஒரு முதியவரை ஏமாற்றி 10,000 சுவிஸ் ஃப்ராங்குகளைப் பறித்துள்ளார்கள்.
ஆனால், இந்த முதியவரின் சமயோகித புத்தியால் அவர்கள் இருவரும் பொலிசில் சிக்கிக்கொண்டார்கள்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |