இளைஞர்கள் நடத்திய பார்ட்டி: சுவிஸ் மாகாண விவசாயிகள் புகார்
சுவிட்சர்லாந்தில் இளைஞர்கள் புல்வெளியில் நடத்திய பார்ட்டி தொடர்பில் விவசாயிகள் புகார்
சுவிட்சர்லாந்தின் வாட் மாகாணத்தில், இளைஞர்கள் புல்வெளியில் நடத்திய பார்ட்டி தொடர்பில் விவசாயிகள் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்கள்.
விவசாயிகள் புகார்
வெள்ளிக்கிழமை இரவு, சுவிட்சர்லாந்தின் வாட் மாகாணத்தில், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கூடி புல்வெளிகளில் சட்டவிரோதமாக பார்ட்டி ஒன்றை நடத்தியுள்ளார்கள்.

அதைத் தொடர்ந்து பொலிசில் புகாரளிக்கப்பட, பொலிசார் வந்து பார்ட்டி ஒருங்கிணைப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பார்ட்டியை ஞாயிற்றுக்கிழமை காலை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளார்கள்.
விடயம் என்னவென்றால், ஏற்கனவே சுவிஸ் விவசாயிகள் பலர் தங்கள் பசுக்களுக்கு புல் இல்லாததால் கடும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளார்கள்.
இந்நிலையில், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் புல்வெளியில் பார்ட்டி நடத்தியதால், புல்வெளி நாசமாகிவிட்டதாகவும், அதனால் தங்கள் பசுக்கள் கோடையில் மேய்வதற்கு புல் இல்லாமல் போய்விட்டதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள்.
சம்பந்தப்பட்ட முனிசிபாலிட்டியும் பார்ட்டி நடத்தியவர்கள் மீது புகாரளித்துள்ள நிலையில், பார்ட்டி ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |