கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கோடை: சுவிஸ் விவசாயிகள் எச்சரிக்கை
Farmers warn that another summer like this one would force cuts to herds and crops: அடுத்த ஆண்டும் கோடை இதேபோல கடுமையான வெப்பமுடையதாக இருக்குமானால், தங்கள் விவசாயத்தைக் குறைக்கும் நிலை ஏற்படும் என விவசாயிகள் எச்சரித்துள்ளார்கள்.
சுவிட்சர்லாந்தில், செப்டம்பர் மாதம் வரையான காலகட்டத்தில், வெயிலும் வறட்சியும் விவசாயத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கால்நடைகள்
வெப்பம் மற்றும் தீனி பற்றாக்குறையால் கால்நடைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

கால்நடைகள் குட்டிகளை ஈனுவதில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன, சில இடங்களில், ஈனும் குட்டிகள் வழக்கத்தைவிட சிறியதாக இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள்.
விவசாயிகள் எச்சரிக்கை
இந்த ஆண்டு கடுமையான வெப்பத்தால், சீஸ் உற்பத்தி 13 சதவிகிதமும், பழங்கள் உற்பத்தி 30 சதவிகிதமும் குறைந்துள்ளது.
சில இடங்களில் வெப்பம் காரணமாக, ஆப்பிள்களும், பேரிக்காய்களும் தாமாகவே மரங்களிலிருந்து உதிர்ந்து விழுந்துவிடுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள்.
ஆக, அடுத்த ஆண்டும் இதேபோல் வெப்பம் கடுமையாக இருக்குமானால், தங்கள் தொழிலையே முழுமையாக மாற்றி அமைக்க நேரிடலாம் என விவசாயிகள் எச்சரித்துள்ளார்கள்.