பக்கத்து நாட்டில் நடக்கும் நிகழ்ச்சிக்காக நாங்கள் செலவு செய்வதா?
சுவிஸ் மாகாணம் கோபம் பக்கத்து நாட்டில் நடக்கும் நிகழ்ச்சிக்காக நாங்கள் செலவு செய்யவேண்டுமா என சுவிஸ் மாகாணமொன்றின் அதிகாரிகள் கோபக் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
சுவிஸ் மாகாணம் கோபம்
2003ஆம் ஆண்டு, பிரான்சிலுள்ள Évianஇல், G8 உச்சி மாநாடு நடைபெற்றது.

மாநாட்டுக்கு முந்தைய இரவு, உலகமயமாக்கலுக்கு எதிரான அமைப்பொன்றைச் சேர்ந்த சிலர் ஜெனீவாவில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார்கள்.
ஆர்ப்பாட்டமாக துவங்கிய விடயம், சூறையாடலில் முடிந்தது. ஆடம்பர பொருட்கள் விற்பனை நிலையங்கள், கடைகள் என அனைத்தையும் நொறுக்கிய ஒரு கூட்டம் பொருட்களை சூறையாடியது.
அப்போது நிகழ்ந்த வன்முறை, சூறையாடலால் ஏற்பட்ட இழப்பு ஆகியவற்றின் காயம் மனதளவில் இன்னமும் பலருக்கும் ஆறவில்லை.
இந்நிலையில், அடுத்த மாதம், அதாவது, ஜூன் மாதம், பிரான்சிலுள்ள Évian என்னுமிடத்தில் மீண்டும் G7 உச்சி மாநாடு நடைபெற உள்ளது.

ஆகவே, இம்முறையும் முன்போல் ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்படலாம் என்பதால், ஜெனீவா பொலிஸ் துறையினர் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளைத் துவக்கியுள்ளார்கள்.
ஆக, பிரான்சில் நடக்கும் ஒரு நிகழ்வுக்காக, ஜெனீவா மாகாணம் பாதுகாப்பு தொடர்பில் செலவு செய்யவேண்டியுள்ளது.
எனவே, அந்த செலவை பகிர்ந்துகொள்ளுமாறு பிரான்ஸ் அரசிடம் சுவிட்சர்லாந்து அரசு கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால், பிரான்ஸ் அரசோ, சுவிட்சர்லாந்தில் நடக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கு பிரான்சில் நடக்கும் மாநாடு காரணமில்லை, சுவிஸ் மக்கள் கட்சி முன்வைத்துள்ள வாக்கெடுப்புதான் காரணம் என்று கூறி, செலவை பகிர்ந்துகொள்ள மறுத்துவிட்டதாம்.
பிரான்ஸ் உதவி செய்யாததால் சுவிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோபம் கொள்ள, பிரான்சில் நடக்கும் மாநாட்டுக்கான பாதுகாப்பு செலவு நம் தலை மீது விழுந்துவிடுமோ என ஜெனீவா மாகாணம் பயந்துகொண்டிருக்கிறது!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |