லண்டன் விமான நிலையத்தில் பரபரப்பு! புறப்பட்டு சென்ற சுவிஸ் விமானம் திடீர் தரையிறக்கம்...
லண்டனிலிருந்து சூரிச்சுக்கு புறப்பட்ட சுவிஸ் விமானம் ஒன்று சிறிது நேரத்தில் மீண்டும் லண்டனுக்கே திரும்பி வந்து அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸ் ஏர் விமானம் LX 339, உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மாலை 8.25 மணிக்கு லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.
பயணிகளுக்கான அந்த குறுகிய விமானம் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரத்திற்கு இரவு 10.15 மணிக்கு சென்றடையும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அந்த விமானம் புறப்பட்ட 50 நிமிடங்களில் அவசரஅவசரமாக மீண்டும் ஹீத்ரோ விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
காக்பிட்டில் அசாதாரண வாசனையை விமானிகள் கவனித்ததைத் தொடர்ந்து அந்த விமானம் திரும்ப லண்டனுக்கே திருப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று ஸ்விஸ் ஏர் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
. இந்த "சம்பவம் தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது," என்று அவர்கள் கூறினர். அதனைத்தொடர்ந்து இந்த ஏர்பஸ் A220-100 ரக விமானம் விமானம் இப்போது பராமரிப்புக்கு உட்படுத்தப்படும்.
விமான நிலையத்திற்கு தீயணைப்புப் படையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அழைக்கப்பட்டனர், "இதுபோன்ற சந்தர்ப்பங்களில் வழக்கமாக உள்ளது" அதிகாரிகள் கூறினர்.
ஆனால், இதுவரை ஆய்வு செய்ததில் விமானத்தில் புகை எதுவும் கண்டறியப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் இருந்த 101 பயணிகள், பத்திரமாக விமானத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். அவர்கள் "இப்போது மற்ற விமானங்களில் மீண்டும் முன்பதிவு செய்யப்படுவார்கள் அல்லது தேவைப்பட்டால் ஹோட்டல்களில் தங்கவைக்கப்படுவார்கள்" என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மொத்தம் 426 கடல் மைல்கள் பயணித்த அந்த விமானம், திரும்பிச் செல்ல வேண்டிய நேரத்தில் கிட்டத்தட்ட Dover நகரத்தை அடைந்துவிட்டது.

